இயக்குநர் எழிலின் உருவாக்கத்தில் 'ஆயிரம் ஜென்மங்கள்'

இயக்குநர் எழிலின் உருவாக்கத்தில் 'ஆயிரம் ஜென்மங்கள்'

1 mins read
96b90bbe-ef08-4122-9990-8a3bf9d1f912
எழிலின் இயக்கத்தில் உருவாகும் 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தில் நடித்து வரும் ஜி.வி.பிரகா‌ஷ், நிகிஷா படேல். படம்: ஊடகம் -

சினிமாவில் எந்தத் திசையில் நடைபோட வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார் ஜி.வி.பிரகாஷ். தற்போது எழில் இயக்கத்தில் 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தில் நடித்து வரும் அவருக்கு ஜோடி நிகிஷா படேல்.

ஈஷா ரெப்பா மற்றொரு நாயகியாக நடிக்க, திகிலும் நகைச்சுவையும் கலந்த படமாக இது உருவாகி வருகிறது. மேலும், சாக்‌ஷி அகர்வால், சதீஷ், ஆடுகளம் நரேன், வையாபுரி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சத்யா இசையமைக்க ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார். "படத்துக்குப் படம் நடிப்பில் மெருகேறி வருகிறார் ஜி.வி. அதை இந்தப் படமும் உறுதி செய்யும்," என்கி்றார் இயக்குநர் எழில்.