அண்மையில் திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டது பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
வனிதாவின் அண்மைய திருமணம் குறித்து சில திரையுலகப் பிரபலங்கள் விமர்சித்துள்ளனர். வனிதாவும் அவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உள்ளிட்டோர் காணொளிகள் வெளியிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வனிதாவும் அவர்களுடன் மல்லுக்கட்டி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தமது டுவிட்டர் பக்கத்தில் நயன்தாரா, பிரபுதேவா இடையேயான நட்பு குறித்து குறிப்பிட்டிருந்தார் வனிதா.
பிரபுதேவாவுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தபோதிலும் அவர் நயன்தாராவுடன் நெருக்கமாக இருந்ததாகவும் அதுகுறித்து யாருமே கேள்வி எழுப்பவில்லை என்றும் வனிதா தமது பதிவில் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது.
தன்னைக் குற்றம்சாட்டும் பிரமுகர்கள் ஏன் நயன்தாராவை மட்டும் குறைகூறவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் வனிதா. இது இப்போது தலைவலியாக மாறி உள்ளது.
இதனால் கடும் கோபமடைந்த நயன்தாரா ரசிகர்கள், பிரபுதேவா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தபிறகே நயன்தாராவை மணந்து கொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் விவாகரத்துக்கு முன்பாகவே நயன்தாராவை திருமணம் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டு வனிதாவுக்குப் பதிலடி கொடுத்தனர்.
மேலும் நயன்தாராவுக்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் டுவிட்டரில் அணி திரண்டனர்.
வனிதா உடனடியாக நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டுவிட்டரில் ரசிகர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.
இதையடுத்து அந்தத் தளத்திலிருந்து வனிதா வெளியேறி இருப்பதாக கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள் கூறுகின்றனர்.
எனினும் இன்ஸ்டகிராமில் இருந்து விலகியது குறித்து வனிதா தரப்பிலிருந்து விளக்கம் ஏதும் வரவில்லை.

