‘இது சினிமா தந்த பரிசு’

தனது சினிமா வாழ்க்கை இது­வரை திருப்தி­க­ர­மாக இருக்­கிறது என்­கி­றார் நடிகை சாய் ­பல்­லவி.

பெரிய நடி­கை­யாக வேண்­டும், பிற­ரால் சாதிக்கமுடி­யாத பல­வற்­றைச் சாதிக்க வேண்­டும் என்­பன போன்ற லட்­சி­யங்­கள் ஏதும் தமக்கு இல்லை என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டார்.

தனுஷ் ஜோடி­யாக ‘மாரி-2’ படத்­தின் மூலம் தமி­ழில் அறி­மு­க­மான சாய்­பல்­லவி தனது நடிப்­பா­லும் நட­னத்­தா­லும் ரசி­கர்­கள் மன­தைக் கவர்ந்து வருகிறார்.

தனு­சு­டன் இவர் இணைந்து ஆடிய ‘ரௌடி பேபி’ பாடல் நட­னத்­துக்கு உல­க­ள­வில் வர­வேற்பு கிடைத்­துள்­ளது. இதை­ய­டுத்து சூர்­யா­வு­டன் ‘என்­ஜிகே’ படத்­தில் நடித்­தார்.

இந்­நி­லை­யில் தம்­மால் எந்த ஒரு கட்­டத்­தி­லும் கவர்ச்­சி­யாக நடிக்க முடி­யாது என்று தெரி­வித்­துள்­ளார் சாய்­பல்­லவி.

தனது பலம் என்ன, பல­வீ­னம் என்ன என்­பது குறித்து நன்கு அறிந்து வைத்­தி­ருக்­கி­றா­ராம். என­வே­தான் தமக்­குப் பொருத்­த­மில்­லாத கதா­பாத்­தி­ரங்­களில் நடிப்­ப­தில்லை என்­கி­றார்.

“எல்­லோ­ரு­டைய மன­தி­லும் நிலைத்து நிற்­பது போன்ற நல்ல கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­க­வேண்­டும் என்­பதே எனது விருப்­பம். அதற்­கு­ரிய பாராட்டு கிடைத்­தால் அதுவே எனக்­குப் போது­மா­னது.

“வீட்­டி­லும் வெளி­யி­லும் யாருமே என்னை ஒரு கதா­நா­யகி எனும் கோணத்­தில் பார்க்­க­வில்லை. எல்­லோ­ருமே என்னை தங்­கள் வீட்­டுப் பெண்­ணா­கத்­தான் கரு­து­கி­றார்­கள். இது­தான் சினிமா எனக்­குக் கொடுத்­தி­ருக்­கும் மிகப்­பெ­ரிய பரிசு,” என்று சொல்­லும் சாய்­பல்­லவி, தம்­மால் அரை­குறை ஆடை அணிந்து நடிக்கமுடி­யாது என்­கி­றார்.

20 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு தனது குழந்­தை­க­ளு­டன் தாம் நடித்த படங்­க­ளைப் பார்க்­கும்­போது மன­தில் எந்­த­வித குறு­கு­றுப்­பும் இருக்­கக்­கூ­டாது என விரும்­பு­கி­றா­ராம்.

“நான் ஏற்­கும் கதா­பாத்­தி­ரங்­கள் எனக்கு மட்­டு­மல்­லா­மல், படம் பார்க்­கி­ற­வர்­க­ளுக்­கும் சௌக­ரி­ய­மாக இருக்­க­வேண்­டும். எனது கதா­பாத்­தி­ரத்­தில் அவர்­க­ளு­டைய மகள் இருந்­தி­ருந்­தால் ஏற்­றுக்­கொள்­வார்­களா என்று ஒன்­றுக்கு இரண்டு முறை யோசித்­துப் பார்ப்­பேன். அதன் பிறகே அதில் நடிக்­க­லாமா என முடி­வெ­டுப்­பேன்.

“என் குழந்­தை­க­ளு­டன் நான் நடித்த படங்­க­ளைப் பார்க்­கும்­போது அவர்­க­ளுக்­கும் புரிய வேண்­டும், என் நடிப்பு மகிழ்ச்­சி­யைத் தர­வேண்­டும். இதுவே எனது விருப்­பம். மேலும் என் பெற்­றோர், தோழி­கள், நான் நடிக்­கும் படங்­க­ளை­யும் எனது நடிப்­பை­யும் பார்த்து பெரு­மைப்­பட வேண்­டும். அப்­ப­டிப்­பட்ட கதை­களில் மட்­டுமே நடிக்­கி­றேன்,” என்­கி­றார் சாய்­ பல்­லவி.

இவர் தன் முடி­வில் இந்­த­ளவு உறு­தி­யாக இருக்­கி­றார் எனில் மற்­றொரு இளம் நாய­கி­யான அனகா திடீ­ரென கவர்ச்­சிப் பாதைக்கு மாறி­யுள்­ளார். ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடி­யாக ‘நட்பே துணை’ படத்­தில் நடித்த இவ­ருக்­குத் தமி­ழில் எதிர்­பார்த்த வாய்ப்­பு­கள் அமை­ய­வில்­லை­யாம்.

கடந்த 2017ஆம் ஆண்டு பிஜு­மோ­கன் நடிப்­பில் வெளி­யான ‘ரக்­ஷதி­காரி’ படத்­தின் மூலம் மலை­யா­ளத்­தில் அறி­மு­க­மா­ன­வர் இவர். பிறகு சுந்­தர் சி. தயா­ரித்த ‘நட்பே துணை’ மூலம் கோடம்­பாக்­கத்­தில் களமிறங்கினார்.

கவர்ச்சி காட்­டா­மல் அனகா அடக்க ஒடுக்­க­மாக நடித்­தி­ருந்த இப்­ப­டத்­துக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தது. இருப்­பி­னும் வாய்ப்பு கிடைக்­கா­த­தால் வருத்­தத்­தில் உள்­ளார்.

இந்­நி­லை­யில், யாரும் எதிர்­பா­ராத வகை­யில் தனது கவர்ச்­சிப் படங்­களை இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­விட்­டுள்­ளார் அனகா. அவற்றைக் கண்டு ரசி­கர்­கள் வாய் பிளந்துள்ளனர்.

இது­கு­றித்து அவ­ரது இன்ஸ்­ட­கி­ராம் பதி­வுக்­குப் பின்­னூட்­டம் இட்­டுள்ள ரசி­கர்­கள் எப்­ப­டியோ அவ­ருக்கு வாய்ப்பு கிடைத்­தால் மகிழ்ச்சி எனக் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!