போலிசாருக்கு நன்றி கூறிய ரகுல்

போலிசாருக்கு நன்றி கூறிய ரகுல்

1 mins read
d9440e7e-a404-4c8a-9fa7-31427f46157f
பொதுமக்களாகிய நாம் இயல்பு வாழ்க்கையை அனுபவிப்பதற்கு போலிசாரின் மகத்தான பணியே காரணம். தெலுங்கானா முதல்வருக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ரகுல் பிரீத்சிங் ஒரு காணொளியில் குறிப்பிட்டுள்ளார். படம்: ஊடகம் -

கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினரின் பங்களிப்பு அலாதியானது என்கிறார் ரகுல் பிரீத்சிங்.

இது தொடர்பாக வெளியிட்ட காணொளிப் பதிவு ஒன்றில் தங்களது குடும்பத்தையும் ஆரோக்கியத்தையும்கூட பொருட்படுத்தாமல் போலிசார் பொதுமக்களுக்காக வெயிலிலும் மழையிலும் 24 மணி நேரமும் உழைத்து வருவது தம்மை நெகிழ வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இன்று பொதுமக்களாகிய நாம் இயல்பு வாழ்க்கையை அனுபவிப்பதற்கு போலிசாரின் மகத்தான பணியே காரணம். தெலுங்கானா முதல்வருக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று ரகுல் பிரீத்சிங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து காவல்துறையைச் சார்ந்த சிலர் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.