ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்தா ருடன் நேரத்தைச் செலவிடுவது உற்சாகமளிப்பதாக சொல்கிறார் யோகிபாபு.
நண்பர்களுடன் தொலைபேசியில் பேசுவது, குடும்பத்தாருடன் உரையாடுவது, நல்ல திரைப்படங்களைப் பார்ப்பது என்று பொழுது கழிகிறதாம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை வீட்டிலேயே கேக் வெட்டி எளிமையாகக் கொண்டாடி உள்ளார் யோகிபாபு.
அவருக்கு நெருக்கமான ஓரிரு நண்பர்கள் மட்டுமே இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
யோகிபாபு பிறந்தநாள் கேக்கை வெட்ட, அவரது நண்பர் அதை எடுத்து யோகியின் முகத்தில் பூசி கலாட்டா செய்யும் காணொளிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

