வடிவேலுக்கு 'இம்சை அரசன்'; சந்தானத்துக்கு 'பிஸ்கோத்'

வடிவேலுக்கு 'இம்சை அரசன்'; சந்தானத்துக்கு 'பிஸ்கோத்'

2 mins read
eaef4407-ab1b-4e2e-afe0-03529abd2bfe
'பிஸ்கோத்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. படம்: ஊடகம் -

பெரிய வெற்­றிப் படங்­க­ளைக் கொடுக்­கா­விட்­டா­லும் தயா­ரிப்­பா­ள­ரின் முத­லீட்­டுக்­குப் பாத­கம் ஏற்­ப­டாத வகை­யில் சந்­தா­னம் நடிக்­கும் படங்­கள் வசூல் தரு­கின்­றன.

இந்­நி­லை­யில், 'பிஸ்­கோத்' படம் ஒரு கதா­நா­ய­க­னாக சந்­தா­னத்­துக்கு பெரிய திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­தும் என்­கி­றார் அதன் இயக்­கு­நர் கண்­ணன்.

"என்­னைப் பொறுத்­த­வரை வடி­வே­லு­வுக்கு 'இம்சை அர­சன்' எப்­படி பெரிய வெற்­றிப் பட­மாக அமைந்­ததோ, அதே போல் சந்­தா­னத்­துக்கு இந்­தப் படம் இருக்­கும். அந்த நம்­பிக்­கை­யால்­தான் இந்­தப் படத்தை நானே தயா­ரிக்­கி­றேன்," என்­கி­றார் கண்­ணன்.

இதில் சந்­தா­னத்­துக்கு ஜோடி­யாக இரு நாய­கி­களை கள­மி­றக்கி உள்­ள­னர். தாரா அலிஷா பெர்­ரி­யும் ஸ்வாதி முப்­ப­லா­வும் நடிப்பு, கவர்ச்சி, நட­னம் என அனைத்து வகை­யி­லும் அசத்தி உள்­ள­ன­ராம்.

முக்­கி­யக் கதா­பாத்­தி­ரத்­தில் பழம்­பெ­ரும் நாயகி செள­கார் ஜானகி நடித்­துள்­ளார்.

படப்­பி­டிப்பு முழு­மை­யாக முடி­வ­டைந்து இறு­திக்­கட்­டப் பணி­கள் மும்­மு­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றன.

விரை­வில் முன்­னோட்ட காட்­சித் தொகுப்பு வெளி­யா­கும் நிலை­யில், இப்­ப­டம் குறித்த சுவா­ர­சி­ய­மான தக­வல்­கள் சில­வற்றை வெளி­யிட்­டுள்­ளார் இயக்­கு­நர் கண்­ணன்.

சுமார் முப்­பது நிமி­டக் காட்­சி­கள் 1980களில் நடை­பெ­று­வது போன்று அமைக்­கப்­பட்­டுள்­ள­தாம். இப்­ப­கு­தி­யில் சந்­தா­னம் மன்­னர் வேடத்­தில் வரு­வா­ராம்.

"பிஸ்­கட் தயா­ரிக்­கும் தொழிற்­சாலை ஒன்றை முக்­கிய கதா­பாத்­தி­ரம் போன்று சித்­திரித்­துள்­ளோம். அத­னால்தான் படத்­துக்கு 'பிஸ்­கோத்' என்று தலைப்பு வைத்­தோம்.

"சந்­தா­னத்­தின் வேறு சில பரி­மா­ணங்­களை இதில் வெளிப்­ப­டுத்தி இருக்­கி­றோம். 'இம்சை அர­சன்' படம் போன்று இது­வும் பேசப்­படும் பட­மாக இருக்­கும்.

"சந்­தா­னம் மன்­ன­ராக நடிக்கும் காட்­சி­கள் ரசி­கர்­களை வெகு­வா­கக் கவ­ரும். இதற்­காக அந்­தக் காலத்து ஆதா­ரங்­களை எல்­லாம் எடுத்து வைத்­துக் கொண்டு கலை இயக்­கு­நர் ராஜ்­கு­மார் அரங்­கம் அமைத்­தார்.

"மேலும், மிக­வும் சிர­மப்­பட்டு உடை அலங்­கார நிபு­ணர் பிரியா ஆடை­களை வடி­வ­மைத்­துக் கொடுத்­தார். இதற்­கான காட்­சி­களில் துணை நடி­கர்­கள் 500 பேர் நடித்­த­னர். அவர்­கள் அனை­வ­ருக்­கும் உடை­கள் தயா­ரிக்­கப்­பட்­டன.

"அந்­தக் காட்­சி­கள் பதி­னெட்­டாம் நூற்­றாண்­டுக் கால­கட்­டத்­தில் நடப்­ப­தாக இருக்­கும். பிறகு 1980களில் நடக்­கும் சில சம்­ப­வங்­கள், அதை­ய­டுத்து இப்போதைய 2020ஆம் ஆண்டு சம்­ப­வங்­கள் என்று மூன்று வெவ்­வேறு கால­கட்­டங்­களில் நடக்­கும் சம்­ப­வங்­கள் படம் பார்ப்­ப­வர்­க­ளுக்கு வித்­தி­யா­ச­மான அனு­ப­வத்தை தரும்.

"இம்­மூன்று கால­கட்­டத்­துக்­கும் என்ன தொடர்பு என்­பது படம் பார்த்­தால்­தான் புரி­யும். மொத்­தத்­தில் வயிறு குலுங்க சிரிக்க வைக்­கும் தர­மான படைப்பைக் காண ரசி­கர்­கள் தங்­களை தயார்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்," என்­கி­றார் இயக்­கு­நர் கண்­ணன்.

படம் எதிர்­பார்த்­த­தை­விட மிக நன்­றாக வந்­தி­ருப்­ப­தாக சந்­தா­னம் தரப்­பும் திருப்தி தெரி­வித்­துள்­ள­தா­கத் தக­வல். இந்­தப் படம் நிச்­ச­யம் நல்ல வசூல் காணும் என சந்­தா­னம் தனக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளி­டம் கூறி வரு­கி­றா­ராம்.