வெற்றிக்குத் தயாராகும் விக்ரம் பட இயக்குநர்

வெற்றிக்குத் தயாராகும் விக்ரம் பட இயக்குநர்

1 mins read
f53f2654-767d-4918-8d7c-c25c13db5013
-

மூன்றாவது வெற்றிக்கு தயாராகி வருகிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

அருள்நிதிக்கு 'டிமான்டி காலனி', நயன்தாராவுக்கு 'இமைக்கா நொடிகள்' என அதிரடி வெற்றிப் படங்களைத் தந்தவர் இப்போது விக்ரமுடன் 'கோப்ரா'வில் கைகோர்த்திருக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடலாக வெளியான 'தும்பி தும்பி துள்ளல்...' இதுவரை 50 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.

விக்ரம் ஏழு தோற்றங்களில் நடிப்பது தெரியும். அடுத்து வெளியாகும் முன்னோட்ட காட்சித் தொகுப்பு பார்ப்பவர் களை மிரள வைக்குமாம்.