தமக்கும் மனைவி சாயிஷாவுக்கும் பல விஷயங்களில் ஒரே மாதிரியான எண்ண அலைவரிசை இருப்பதாகப் பூரித்துப் போகிறார் ஆர்யா.
இதுபோன்று எல்லோருக்கும் அமைந்துவிடாது என்றும் அந்த வகையில் தாம் அதிர்ஷ்டசாலி என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டதாலும், இருவரும் ஒரே துறையில் இருப்பதாலும், நிறைய விஷயங்களை ஒரே கோணத்தில் அலசி ஆராய்ந்து முடிவெடுக்க முடிகிறது," என்கிறார் ஆர்யா.
'கஜினிகாந்த்', 'காப்பான்' ஆகிய படங்களுக்கு பிறகு 'டெடி' படத்தில் கணவர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சாயிஷா, ஊரடங்கின் போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டாராம். குறிப்பாக, பலவிதமான கேக் தயாரிப்பது எப்படி என தெரிந்துகொண்டுள்ளார்.

