சந்தீப் கிஷன், அன்யா சிங் இணைந்து நடித்துள்ள படம் 'கண்ணாடி'. அதிரடி திகில் படைப்பாக உருவாகி உள்ளது.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்கி உள்ளார். கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், ஆனந்தராஜ், முரளி சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜி சுப்பிரமணியன் தயாரிக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.
படத்தில் இளையர்களை கவரும் அம்சங்கள் அதிகம் இருப்பதாகத் தகவல்.

