மனிஷா: முன்பே பல மோசமான புயல்களை சந்தித்துவிட்டேன்

கொரோனாவால் நாட்டில் நிலவும் சூழல் தம்மை எந்த விதத்திலும் பயமுறுத்தவில்லை என்கிறார் நடிகை மனிஷா கொய்ராலா.

ஏனெனில் இதைவிட மோசமான புயல்கள் ஏற்கெனவே தம் வாழ்க்கையில் வீசியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் புயல்களுடன் ஒப்பிடும்போது கொரோனா விவகாரம் இவருக்கு சாதாரண பிரச்சினையாகவே தோன்றுகிறதாம். மேலும், வழக்கம்போல் அமைதியாக இருப்பதாகவும் தினமும் யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபடுவதாகவும் சொல்கிறார் மனிஷா.

“நான் தினமும் இயற்கையோடு உரையாடுகிறேன். செடிகளுடனும் எனது பெற்றோர்களுடனும் நேரத்தை செலவிடுகிறேன்.

“மும்பையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பறவைகள் சத்தம் கேட்கிறது. இதற்கு முன்பு இந்த மாதிரி அமைதியான சூழலை நான் கண்டதில்லை,” என்று உற்சாகத்துடன் பேசும் மனிஷாவுக்கு, மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் அறவே இல்லையாம்.

நோய் பாதிப்புக்குப் பின் தனியாக இருப்பதுதான் மகிழ்ச்சி தருகிறதாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!