தமன்னா புகார்: நடிகர் கைது

1 mins read
4fe4c03d-62a0-4f2a-b870-f0f4b531ae92
தமன்னா பாட்டியா. (படம்: ஊடகம்) -

நடிகைகள் தமன்னா, லாவண்யா திரிபாதி ஆகியோர் குறித்து அவதூறு பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் தெலுங்கு நடிகர் சுனிஷித் கைதாகியுள்ளார்.

பேட்டி ஒன்றில், லாவண்யா திரிபாதியை தாம் திருமணம் செய்துகொண்டதாக அவர் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மூன்று முறை கருக்கலைப்பு செய்த பின்னர் லாவண்யா தம்மை விவாகரத்து செய்துவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

தமன்னா உள்ளிட்ட சில நடிகைகளுடன் தமக்கு தொடர்பு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டதால் நடிகைகள் பலர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், தமன்னா அளித்த புகாரின் பேரில் ஹைதராபாத் போலிசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சுனிஷித்தை கைது செய்துள்ளனர்.