'மூடர்கூடம்' நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அக்னிச்சிறகுகள்'. அதிரடிப் படமாக உருவாகி வரும் இதில் ஷாலினி பாண்டே, அக்ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். "தொடக்கம் முதல் இறுதிக்காட்சி வரை படம் விறுவிறுப்பாக இருக்கும். யூகிக்க முடியாத பல விஷயங்கள் படத்தில் உள்ளன," என்கிறார் இயக்குநர் நவீன்.
'அக்னிச்சிறகுகள்' விறுவிறுப்பான படம்
1 mins read
'அக்னிச்சிறகுகள்' படக்குழுவினர். படம்: ஊடகம் -

