ஐஸ்வர்யா: இதுவரை யாரும் காதலிக்கவில்லை

ஐஸ்வர்யா: இதுவரை யாரும் காதலிக்கவில்லை

2 mins read
4da0cb3e-47ce-41a6-a63f-a58b90b6e208
ஐஸ்வர்யா மேனன். படம்: ஊடகம் -

கல்­விக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் குடும்­பத்­தில் பிறந்­த­தால், தமக்கு சிறு வயது முதலே நன்­றா­கப் படித்து பெய­ரெ­டுக்க வேண்­டும் எனும் ஆசை இருந்­த­தா­கச் சொல்­கி­றார் இளம் நாயகி ஐஸ்­வர்யா மேனன்.

'தமிழ் படம் 2', 'நான் சிரித்­தால்' என தமி­ழில் சில படங்­கள் மூலம் ரசி­கர்­க­ளைக் கவர்ந்­த­வர், அடுத்து இரண்டு படங்­களில் ஒப்­பந்­த­மாகி உள்­ளா­ராம்.

இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் இவர் அவ்­வப்­போது வெளி­யி­டும் புகைப்­ப­டங்­களை தரி­சிப்­ப­தற்­கென்றே ஒரு கூட்­டம் ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கிறது. கவர்ச்­சி­யால் அந்­தக் கூட்­டத்தை கிறங்­க­டிக்­கி­றார் ஐஸ்­வர்யா.

அடிப்­ப­டை­யில் இவர் பொறி­யி­ய­லா­ள­ராம். சொந்த ஊர் ஈரோடு. அங்­கு­தான் பள்­ளிப்­ப­டிப்பை முடித்­துள்­ளார். சென்­னை­யில் பட்­டப்­ப­டிப்பை முடித்த கையோடு விளம்­ப­ரப் படங்­களில் நடிக்­கத் துவங்­கி­னா­ராம்.

"வீட்­டில் எல்­லோ­ருமே படிப்­பா­ளி­கள். அப்பா எம்­பிஏ, அம்மா பிகாம், அண்­ணன் மருத்­து­வர் என்று பெரு­மை­யாக சொல்­லிக் கொள்­வேன். எனக்­கும் இயல்­பா­கவே படிப்­பில் ஆர்­வம் அதி­கம்.

"நன்­றா­கப் படித்த கார­ணத்­தால்­தான் சினிமா ஆசை குறித்து வீட்­டில் பேச முடிந்­தது. விளம்­ப­ரப் படங்­களில் நடித்த பிறகு சினி­மா­வி­லும் சாதிக்க முடி­யும் என்ற நம்­பிக்கை வந்­தது," என்­கி­றார் ஐஸ்­வர்யா.

சினி­மா­வில் நடிக்­கப் போவ­தாக இவர் சொன்­ன­தும் பெற்­றோ­ரும் அண்­ண­னும் முத­லில் அதிர்ச்சி அடைந்­த­ன­ராம். கார­ணம் இவ­ரது குடும்­பத்­துக்­கும் சினிமா துறைக்­கும் எந்த வகை­யி­லும் சம்­பந்­தம் இல்லை என்­ப­து­தான்.

"எங்­க­ளுக்­குத் தெரிந்த யாரும் திரை­யு­ல­கில் இல்லை. எனவே எப்­படி எனக்கு வாய்ப்பு கிடைத்­தது என்று யோசித்­த­னர். பிறகு ஒரு­வ­ழி­யாக அவர்­களை சம்­ம­திக்க வைத்­தேன்," என்று சொல்­லும் ஐஸ்­வர்யா, அதன் பிற­கு­தான் தமி­ழில் 'ஆப்­பிள் பெண்ணே' படத்­தில் நடித்­துள்­ளார்.

தமி­ழில் சர­ள­மா­கப் பேசு­வ­தால் அந்த வாய்ப்பு கிடைத்­த­தாம். தற்­போது தமிழ், கன்­ன­டம், மலை­யா­ளம் என மும்­மொ­ழி­களில் கவ­னம் செலுத்­து­கி­றார் ஐஸ்­வர்யா.

சமூக வலைத்­த­ளங்­களில் அடிக்­கடி கவர்ச்­சிப் படங்­களை வெளி­யி­டு­கி­றீர்­களே?

"ரசி­கர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டு­வது மிக­வும் பிடிக்­கும். அவர்­களும் அதை விரும்­பு­கி­றார்­கள். கடந்த வாரம்­கூட சேலை கட்டி எடுத்த படங்­க­ளுக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தது.

"பிறகு ஒரு காணொ­ளித் தொகுப்­பை­யும் வெளி­யிட்­டேன்.

"அதற்கு நானே எதிர்­பார்க்­காத அள­வுக்கு பாராட்­டு­கள் குவிந்­தன. மகிழ்ச்­சி­யும் உற்­சா­க­மும் பிடி­ப­ட­வில்லை," என்று துள்­ளிக் குதிக்­கும் ஐஸ்­வர்­யாவை இன்ஸ்­ட­கி­ரா­மில் மட்­டும் சுமார் பதி­னைந்து லட்­சம் பேர் பின்­தொ­டர்­கி­றார்­கள்.

ரசி­கர்­க­ளின் அன்­புக்­கும் பாராட்­டு­க­ளுக்­கும் கட­மைப்­பட்­டி­ருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், தொடர்ந்து கவர்ச்­சிப் படங்­களை வெளி­யிட்டு ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்­து­வா­ராம்.

காதல், திரு­ம­ணம் குறித்து?

"இது­வரை யாரை­யும் காத­லித்­தது இல்லை. உண்­மை­யைச் சொல்ல வேண்­டும் என்­றால் கல்­லூ­ரி­யில் படித்­த­போ­தும் யாருமே என்­னைக் காத­லித்­த­தா­கச் சொன்­ன­தில்லை.

"என்­னைப் பொறுத்­த­வ­ரை­யில் வருங்­கால வாழ்க்கை துணை குறித்து எந்­த­வி­த­மான எதிர்­பார்ப்­பு­களும் இல்லை. நல்­ல­வ­ராக இருந்­தால் அதுவே போதும்," எனப் பக்­கு­வ­மா­கப் பேசு­கி­றார் ஐஸ்­வர்யா.