பாரதிராஜா: மண்ணின் மைந்தன் தனுஷ்

பாரதிராஜா: மண்ணின் மைந்தன் தனுஷ்

1 mins read
c866f97e-c14e-4031-b898-67f480286375
-

தனு­ஷின் பிறந்­த­நாளை நேற்று முன்­தி­னம் அவர் சிறப்­பாக கொண்­டா­டி­னர்.

மேலும் மாரி செல்­வ­ராஜ் இயக்­கத்­தில் உரு­வா­கி­யுள்ள 'கர்­ணன்' படத்­தின் தலைப்பு தோற்­ற­மும் வெளி­யி­டப்­பட்­டது.

அதில் ஒரு வாளை பல கைகள் இணைந்து தூக்கி பிடித்­துள்ள காட்சி சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இது­போக ரசி­கர்­க­ளின் உற்­சா­கத்தை இரட்­டிப்­பாக்க கார்த்­திக் சுப்­பு­ராஜ் இயக்­கத்­தில் தனுஷ் நடித்­துள்ள 'ஜகமே தந்­தி­ரம்' படத்­தின் பாடல் ஒன்­றும் வெளி­யா­னது. 'ரகிட ரகிட' என்று தொடங்­கும் அந்­தப் பாட­லுக்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ள­தாம்.

கர்­ணன் தலைப்பு குறித்து ட்விட்­ட­ரில் கருத்து பதி­விட்­டி­ருக்­கும் மாரி செல்­வ­ராஜ், "நீதி சூரி­யனை போல முளைத்­தெ­ழக்­கூ­டி­யது," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே தனு­ஷுக்கு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­துள்ள இயக்­கு­நர் பார­தி­ராஜா, உலகை அதி­ர­வைத்த ஒப்­பற்ற நடி­கன் தனுஷ் என்று புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார்.

"திரை மொழியை மெள­ன­மாய் உடல் அசை­வில் வெளிப்­ப­டுத்தி உலகை அதி­ர­வைத்த ஒப்­பற்ற நடி­கன் தனுஷ். என் மண்­ணின் மைந்­தன். உன் அசுர நடிப்­பைக் கண்டு இன்­னும் வியக்­கி­றேன். பிறந்த நாள் வாழ்த்­து­கள்," என்று பார­தி­ராஜா தமது வாழ்த்துச் செய்தியில் தெரி­வித்­துள்­ளார்.