வாழ்த்தால் வந்த வாய்ப்பு

ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன், அதன்பின் ‘மாஸ்டர்’ படத்தில் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார்.

அடுத்ததாக, தனுஷுடன் இணைந்து ஒரு படத்தில் மாளவிகா நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு நின்றுவிடாமல், அப்படியே வாய்ப்பும் கேட்டு, அதைப் பெற்றும் விட்டார் மாளவிகா.

நடிகர் தனுஷுக்கு கடந்த 28ஆம் தேதி பிறந்தநாள். திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்படி வாழ்த்தியவர்களில் மாளவிகாவும் ஒருவர்.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ்! அற்புதமான ஆண்டு வரவிருக்கிறது. உங்களோடு பணிபுரிய ஆவலாக உள்ளேன். விரைவில் எவரேனும் நம் இருவரையும் ஒரே படத்துக்குத் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்,” என்று தமது டுவிட்டர் பக்கத்தின் வழியாக மாளவிகா தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, இவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட தனுஷ், “நன்றி... விரைவில் நடக்கும் என நினைக்கிறேன்,” எனப் பதிவிட்டு வியப்பளித்திருந்தார்.

இந்நிலையில், கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷின் 43வது படத்தில் மாளவிகா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறாராம். இது தொடர்பாக விரைவில் படக்குழுவிடம் இருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்த் திரையுலகின் பரபரப்பான நாயகனாக வலம் வருகிறார் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், கதாசிரியர் என அனைத்துத் துறைகளிலும் தனது திறமையை அவர் நிரூபித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ வெளியீடு காணத் தயாராக இருக்கிறது. ‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்து இயக்கும் ‘கர்ணன்’ படத்தில் தனுஷ்தான் நாயகன்.

அதன்பின் இயக்குநர் வெற்றிமாறனுடன் மீண்டும் இணையவிருக்கும் தனுஷ், அதன்பின் கார்த்திக் நரேன், ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் ஆகியோரது படங்களில் நடிக்கவுள்ளார்.

இதனிடையே, தமக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து வரும் தனுஷ், அது தொடர்பாக ஓர் அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறார்.

அதில், “என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போய்விட்டேன். அனைத்து பிறந்த நாள் ‘டிபி’க்கள், ‘மாஷ்-அப்’ காணொளிகள், மூன்று மாதங்களாக நீங்கள் செய்து வந்த ‘கவுன்டவுன்’ வடிவமைப்புகள் என அனைத்தையுமே முடிந்தவரை பார்த்து, ரசித்து, மகிழ்ந்தேன். மிக மிக நன்றி.

“அதையும் தாண்டி நீங்கள் செய்த அத்தனை நற்பணிகளையும் கண்டு நெகிழ்ந்த நான், உங்களால் கர்வம் கொள்கிறேன், பெருமைப்படுகின்றேன்!

“மேலும், எனக்குத் தொலைபேசி வாயிலாகவும், பத்திரிகை மூலமாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் வாழ்த்து கூறிய திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் பெருமக்கள், நண்பர்கள் மற்றும் பண்பலை, ஊடகம், தொலைக்காட்சி அன்பர்களுக்கும், என் நலன்விரும்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!