அஜீத் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தில் அஜீத்தின் இணையாக ஹூமா குரேஷி நடிக்கிறார். 'நேர்கொண்ட பார்வை' படத்தை இயக்கிய எச்.வினோத்தே இந்தப் படத்தையும் இயக்குகிறார். இந்நிலையில், 'வலிமை' திரைப்படம் இந்தியிலும் 'டப்' செய்யப்பட்டு வெளியிடப்படும் என தயாரிப்பாளர் போனி கபூர் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அது உண்மையெனில், தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் அஜீத்தின் முதல் படம் 'வலிமை'யாகத்தான் இருக்கும். இந்தப் படத்தில் மோட்டார்சைக்கிள் மற்றும் கார் பந்தயம் மீது ஈடுபாடு கொண்டவராக அஜீத் நடித்துள்ளாராம். தீபாவளிக்கு வெளியிடலாம் எனத் திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு நடைபெறாததால் இப்போது அடுத்த ஆண்டு கோடை விடுமுறை வரை தள்ளிப்போகலாம் எனத் தெரிகிறது.
இந்தியிலும் 'வலிமை' வெளியீடு
1 mins read
எச்.வினோத்தே இயக்கி அஜித், ஹூமா குரேஷி நடிக்கும், 'வலிமை படம் இந்தியிலும் வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பாளர் போனிபூர் தெரிவித்துள்ளார். படம்: ஊடகம் -

