சுரே‌ஷ் காமாட்சி: திரையுலகிலும் குழு அரசியல்

தயாரிப்பாளர்களுக்கிடையே குழு அரசியல் இருப்பதாக ‘மாநாடு’ படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

“தமிழ்த் திரையுலகிலும் குழு அரசியல் இருக்கிறது. அத்தகைய ஒரு சிலரால்தான் மிகப் பழமையான தயாரிப்பாளர்கள் சிலர் ஒதுங்கி இருக்கின்றனர். தான் மட்டுமே வாழவேண்டும் என நினைக்கும் அந்தப் பிரபல தயாரிப்பாளர், மேலும் சிலரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பலரையும் வாழவிடாமல் கெடுத்துக்கொண்டு இருக்கிறார்,” என்று இவர் குற்றம் சுமத்தியுள்ளார்.