நடிகர் அனில் முரளி காலமானார்

நடிகர் அனில் முரளி காலமானார்

1 mins read
22814469-2ba6-43ca-a1ff-e45d09fcf51b
-

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் அனில் முரளி நேற்று காலமானார். அவருக்கு வயது 56.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் முரளி.

இந்நிலையில் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்ட அவர், கடந்த சில தினங்களாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அனில் முரளிக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.