ஷ்ரத்தா: உயரங்கள் தொட ஆசை

தனக்கு வரப்­போ­கும் கண­வர் தம்மை நன்­றா­கப் புரிந்து கொண்­ட­வ­ராக, வாழ்க்­கை­யில் அனு­ச­ரித்­துப் போகக் கூடி­ய­வ­ராக இருக்க வேண்­டு­மென விரும்­பு­கி­றார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

சக நடி­கை­களில் நயன்­தாரா, சமந்தா ஆகிய இரு­வ­ரை­யும் தமக்கு மிக­வும் பிடிக்­கும் என அண்­மைய பேட்டி ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார். இவர்­க­ளைப் போன்றே உய­ரங்­க­ளைத் தொட ஆசைப்­ப­டு­கி­றா­ராம்.

நடி­கை­கள் என்­றாலே திரு­ம­ணம் குறித்து கேள்வி எழுப்­பு­வது வாடிக்­கை­யா­கி­விட்­டது. சமூக வலைத்­த­ளங்­கள், பொது நிகழ்ச்­சி­கள், ஊட­கப் பேட்­டி­கள் என்று அனைத்து இடங்­க­ளி­லும் நாய­கி­க­ளி­டம் நிச்­ச­ய­மா­கக் கேட்­கப்­படும் கேள்வி திரு­ம­ணம் பற்­றியே இருக்­கும்.

இத­னால் சில நாய­கி­கள், இத்­த­கைய கேள்வி எழும் முன்பு தாங்­களே திரு­ம­ணம் குறித்து பேசி­வி­டு­கி­றார்­கள்.

அந்த வகை­யில் தனது திரு­ம­ணம், எதிர்­கால கண­வர் பற்றி ஷ்ரத்தா ஸ்ரீநாத் மனம் திறந்­துள்­ளார். நிச்­ச­ய­மாக காதல் திரு­ம­ணம்­தான் செய்­வா­ராம். தனது முடிவை யாரா­லும் மாற்ற இய­லாது என்று கூறி­யுள்­ளார்.

“பெரி­ய­வர்­கள் நிச்­ச­யம் செய்­யும் திரு­ம­ணங்­கள் தோல்வி அடை­வ­தா­கச் சொல்ல மாட்­டேன். ஆனால் எனது வருங்­கால கண­வ­ரும் நானும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் நன்கு புரிந்து கொண்­ட­வர்­க­ளாக இருக்­க­வேண்­டும் என விரும்­பு­கி­றேன். இதற்கு காதல் திரு­ம­ணம்­தான் வச­தி­யாக இருக்­கும்.

“எனவே கண்­டிப்­பாக காதல் திரு­ம­ணம்­தான் செய்­து­கொள்­வேன். இப்­போது யாரை­யும் காத­லிக்­க­வில்லை,” என்­கி­றார் ஷ்ரத்தா.

நிஜ வாழ்க்­கை­யில் தாம் மிகுந்த துணிச்­சல் மிக்க பெண்­ணாக உரு­வாகி இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், தம்­மால் எத்­த­கைய சூழ்­நி­லை­யை­யும் சமா­ளிக்க இய­லும் என்று கூறி­யுள்­ளார்.

தமக்கு புகை­பி­டிப்­பது, மது அருந்­து­வது போன்ற பழக்­கங்­கள் இல்லை என்­றும், இத்­த­கைய பழக்­கங்­கள் உள்­ள­வர்­களே தைரி­ய­சா­லி­கள் என்று சிலர் நினைப்­பதை தாம் ஏற்­க­வில்லை என்­றும் ஷ்ரத்தா வெளிப்­ப­டை­யாக அண்­மைய பேட்­டி­யில் தெரி­வித்­துள்­ளார்.

“எவ்­வ­ளவு பெரிய பொறுப்­பை­யும் நான் தைரி­ய­மாக ஏற்­பேன். இது­தான் துணிச்­சல் என்­ப­தன் பொருள்,” என்­கி­றார் ஷ்ரத்தா.

தமி­ழில் ‘விக்­ரம் வேதா’, ‘நேர்­கொண்ட பார்வை’ உள்­ளிட்ட படங்­களில் நடித்­துள்ள இவர் தற்­போது விஷா­லு­டன் ‘சக்ரா’, மாத­வ­னு­டன் ‘மாரா’வில் நடித்து வரு­கி­றார்.

சக நடி­கை­களில் நயன்­தாரா, சமந்தா ஆகிய இரு­வ­ரை­யும் இவ­ருக்கு மிக­வும் பிடிக்­கு­மாம். கார­ணம், ஆணா­திக்­கம் நிறைந்த திரை­யு­ல­கில் இரு­வ­ரும் பல ஆண்­டு­க­ளாக தாக்­குப்­பி­டித்து வரு­வது பெரிய சாதனை என்­கி­றார்.

“அது மட்­டு­மல்ல, கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­து­வம் உள்ள படங்­களில் தயக்­க­மின்றி நடிக்­கி­றார்­கள். தயா­ரிப்­பா­ளர்­களும் இயக்­கு­நர்­களும் இவர்­களை நம்பி படம் எடுக்­கி­றார்­கள்.

“இவர்­கள் இரு­வ­ருக்­குமே தனி ரசி­கர் கூட்­டம் இருக்­கிறது. கதா­நா­ய­கர்­க­ளுக்கு இணை­யாக இவர்­க­ளா­லும் திரை­ய­ரங்­குக்கு ரசி­கர்­களை வர­வ­ழைக்க முடி­கிறது. இந்­த­ளவு வளர்ச்சி அடை­வ­தும் சினி­மா­வில் செல்­வாக்­கு­டன் தாக்­குப்­பி­டிப்­பது பெரிய சாதனை. இதற்­குப் பின்­னால் எவ்­வ­ளவு உழைப்பு இருக்­கும் என்­பதை என்­னால் புரிந்­து­கொள்ள முடி­கிறது,” என்­கி­றார் ஷ்ரத்தா.

இவர் திரு­மண வாழ்க்கை குறித்து இந்­த­ளவு தெளி­வாக இருக்­கி­றார் என்­றால் நடிகை பூர்­ணாவோ, திரு­ம­ணம் பற்றி யோசித்­தாலே அச்­சம் ஏற்­ப­டு­வ­தா­கப் புலம்­பு­கி­றார். கார­ணம் அண்­மை­யில் இவரை மையப்­ப­டுத்தி நடந்த பண மோசடி சம்­ப­வம்.

சில வாரங்­க­ளுக்கு முன்பு பூர்­ணா­வுக்கு அவ­ரது பெற்­றோர் தீவி­ர­மாக வரன் தேடி வந்­த­னர். அப்­போது பூர்­ணாவை பெண் கேட்டு அவ­ரது குடும்­பத்­தாரை சிலர் அணு­கி­னர்.

இதை­ய­டுத்து இரு குடும்­பத்­தா­ரும் பேசி திரு­ம­ணத்தை நிச்­ச­யம் செய்­த­னர்.

“என்னை மணக்க இருந்­த­வ­ரும் நானும் திரு­ம­ணத்­துக்­குப் பிறகு எப்­படி வாழ­வேண்­டும் என்­பது பற்­றி­யெல்­லாம் பேசி­னோம். அதன்­பி­றகு எதிர்­பா­ராத சம்­ப­வங்­க­ளால் நிலைமை மாறி­விட்­டது.

“அந்த போலி கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­கள் அன்­பா­கப் பழகி ஏமாற்­றி­னார்­கள். அவர்­களை நினைத்­தாலே பயம் வரு­கிறது. யாரை நம்­பு­வது என்றே தெரி­ய­வில்லை,” என்று இன்­னும் அச்­சம் வில­கா­மல் பேசு­கி­றார் பூர்ணா.

இப்­போது திரு­ம­ணம் வேண்­டாம் என்று பெற்­றோ­ரி­டம் கூறி­விட்டா ராம். இந்த அதிர்ச்­சி­யில் இருந்து மீள நட­னத்­தில் கவ­னம் செலுத்து கிறா­ராம்.