ஊரடங்கு முடிந்த கையோடு வெளியீடு காணும் ‘பூமி’

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளியீடு காண உள்ள படம் ‘பூமி’. இது அவரது 25வது படம். நிதி அகர்வால் இணைந்து நடிக்கிறார். டி. இமான் இசையமைக்க, கவிஞர் தாமரையும் மதன் கார்க்கியும் பாடல்களை எழுதியுள்ளனர். “ஊரடங்கு குறுக்கிடவில்லை என்றால் இந்நேரம் படம் வெளியாகி இருக்கும். தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் படக்குழுவினரின் திறமை மீது கொண்டுள்ள நம்பிக்கையால் எவ்வளவு தாமதம் ஏற்பட்டாலும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். எனவே ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இறுதிக்கட்டப் பணிகளை முடித்து மிக விரைவில் படத்தை வெளி யிடுவோம்,” என்கிறார் இயக்குநர் லக்‌ஷ்மண்.