சுடச் சுடச் செய்திகள்

‘இது சிறு வயது ஆசை’

‘உணர்­வு­கள் தொடர்­கதை’ படத்­தின் மூலம் தமிழ்த் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­கி­யுள்­ளார் ஷெர்­லின் சேத்.

தென்­னிந்­திய மாட­லிங் துறை­யில் நல்ல வர­வேற்­பு­டன் வலம் வரு­ப­வர்.

கடந்த 2017ல் ‘மிஸ் தமி­ழ­கம்’ பட்டத்தைத் தட்­டிச் சென்ற ஷெர்­லின், அதன்பிறகு பல்­வேறு விளம்­ப­ரங்­களில் நடித்த வகை­யில் பிர­ப­ல­மா­னார்.

இந்­நி­லை­யில் ‘உணர்­வு­கள் தொடர்­கதை’ படம் மூலம் இவரை கோடம்­பாக்­கத்து இளம் நாய­கி­க­ளுக்­குப் போட்­டி­யாக கள­மி­றக்கி உள்­ள­னர்.

சிறு வயது முதலே நடிப்பு, மாட­லிங் துறை­யில்­தான் தமக்கு அதிக ஆர்­வம் இருந்­த­தா­கச் சொல்­கி­றார் ஷெர்­லின். நடி­கை­யாக வேண்­டும் என்­ப­து­தான் தொடக்­கத்­தில் இவ­ரது கன­வாம். பிறகு இந்த ஆர்­வம் விண்­வெ­ளித் துறை பக்­கம் சாய்ந்­துள்­ளது.

“என் பெற்­றோ­ரைப் பொறுத்­த­வரை படிப்­புக்­குப் பிற­கு­தான் நடிப்பு என்­ப­தில் திட்­ட­வட்­ட­மாக இருந்­த­னர். சிறு­வ­யது முதலே நன்­றா­கப் படிக்­க­வேண்­டும் என ஊக்­கப்­ப­டுத்­தி­யும் வந்­த­னர். நன்­றா­கப் படிக்க வேண்­டும் என்­ப­தற்­காக அவர்­கள் செய்து கொடுக்­காத வச­தி­களே இல்லை.

“பெற்­றோ­ரின் இந்த அக்­க­றை­யைக் கண்டு நானும் படிப்­பில் கவ­னம் செலுத்­தி­னேன். ஒரு கட்­டத்­தில் விண்­வெ­ளித் துறை­யில் ஆர்­வம் அதி­க­ரித்­த­ப­டி­யால் அது தொடர்­பான விஷ­யங்­களில் கவ­னம் செலுத்­தி­னேன். அவ்­வ­ளவு ஏன், விண்­வெளி வீராங்­க­னை­யாக வேண்­டும் என்­ப­தும் எனது கன­வு­களில் ஒன்­றாக இருந்­தது,” என்­கி­றார் ஷெர்­லின்.

விண்­வெ­ளிக் கனவை நிறை­வேற்­றிக் கொள்­ளும் முடி­வு­டன்­தான் பொறி­யி­யல் படிப்­பைத் தேர்வு செய்­தா­ராம். மேலும் பொறி­யி­யல் படிக்க சென்­னைக்கு இடம் மாறி வந்­துள்­ளார்.

ஆனால் வந்த இடத்­தில் எதிர்­பா­ராத வகை­யில் மாட­லிங் வாய்ப்­பு­கள் தேடி­வர, விண்­வெ­ளிக் கனவு மாய­மாகி விட்­டது. ஒன்­றி­ரண்டு விளம்­ப­ரங்­களில் நடித்து முடித்­த­போது அழகி பட்­ட­மும் கிடைக்க முழு­மூச்­சாக மாட­லிங் துறைக்கு மாறி­யுள்­ளார்.

“விளம்­ப­ரங்­களில் நடிப்­பது பெரிய விஷ­ய­மல்ல. புகைப்­ப­டங்­க­ளுக்­காக அழ­காக காட்சி அளிக்க ­வேண்­டும். சிரிக்­க­வேண்­டும், நடக்­க­வேண்­டும், அவ்­வ­ள­வு­தான்.

“ஆனால், சினி­மா­வில் நடிப்­பது அப்­ப­டி­யல்ல. ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ரங்­க­ளா­கவே மாற­வேண்­டும். அத­னால் இது அலா­தி­யான அனு­ப­வம்,” என்­கி­றார் ஷெர்­லின்.

சிறு­வ­யது முதலே நடிப்­பில் ஆர்­வம் இருந்­தா­லும் பள்ளி, கல்­லூ­ரி­யில் திற­மையை வெளிப்­ப­டுத்த முடி­ய­வில்­லை­யாம். எப்­போ­துமே படிப்­புக்கு முன்­னு­ரிமை அளித்­த­தால் தேர்­வு­கள், மதிப்­பெண்­கள் என்றே நாட்­கள் கடந்­து­விட்­ட­தா­கக் கூறு­கி­றார்.

‘உணர்­வு­கள் தொடர்­கதை’ படத்­தில் வர்த்­தக நிபு­ண­ராக நடித்­துள்­ளா­ராம் ஷெர்­லின். நகர்ப்­பு­றத்­தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி­யின் கதையை மையப்­ப­டுத்தி கதைக்­க­ளத்தை அமைத்­துள்­ளார் இயக்­கு­நர் பாலு சர்மா.

“ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வும் மிகுந்த அர்ப்­ப­ணிப்­பு­டன் பணி­யாற்­றி­யது என் மன­தைக் கவர்ந்­தது. எனக்கு ஜோடி­யாக ரிஷி­கேஷ் நடித்­துள்­ளார்.

“இயக்­கு­நர், உதவி இயக்­கு­நர்­கள், சக நடி­கர்­கள், தொழில்­நுட்­பக் கலை­ஞர்­கள் என அனை­வ­ருமே அன்­பா­க­வும் ஆத­ர­வா­க­வும் இருந்­த­னர்.

“வசன உச்­ச­ரிப்பு, ஒப்­பனை என பல­வற்­றுக்­கும் ஒத்­தா­சை­யாக இருந்­த­தற்கு நன்றி தெரி­விக்க கட­மைப்­பட்­டுள்­ளேன். படப்­பி­டிப்­புக்கு முந்­தைய இரு மாதங்­கள் தீவிர ஒத்­தி­கை­யில் ஈடு­பட்­டோம்.

“அத­னால் படப்­பி­டிப்­பின்­போது சிறப்­பாக நடிக்க முடிந்­தது. இந்­தப் படம் எனக்கு நிச்­ச­யம் நல்ல பெய­ரைப் பெற்­றுத் தரும்,” என்­கி­றார் ஷெர்­லின் சேத்.

முதல் படம் வெளியான பிறகே அடுத்தடுத்த வாய்ப்புகளை ஏற்கும் முடிவில் உள்ள ஷெர்லின், தமிழில் தற்போதுள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடிக்க விரும்புகிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon