'என்னைப் புரிந்துகொண்ட தோழி'

1 mins read
facc31ab-0899-4bf7-b655-b8a83cb8ee0a
நண்பர்கள் தினத்தையொட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அதுல்யா, தாம் திரையுலகில் முன்னேற வேண்டும் என்று ஊக்கப்படுத்துவதும் இந்துஜாதான் என்று குறிப்பிட்டுள்ளார். படம்: ஊடகம் -

சக நடிகை இந்துஜாதான் இந்த உலகில் தன்னை முற்றிலுமாகப் புரிந்துகொண்டவர் என்கிறார் அதுல்யா ரவி.

நண்பர்கள் தினத்தையொட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தாம் திரையுலகில் முன்னேற வேண்டும் என்று ஊக்கப்படுத்துவதும் இந்துஜாதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

"என் குடும்பத்தில் ஒருவராக இருப்பதற்கும் ஆதரவாக இருப்பதற்காகவும் இந்துஜாவுக்கு என் நன்றிகள். இதேபோல் என் தோழியின் வாழ்க்கையில் வரக்கூடிய நல்ல மற்றும் கெட்ட நேரங்களின்போது நானும் நிச்சயம் உடன் இருப்பேன்.

"உனது கடும் உழைப்பு, தூய்மையான விசுவாசம், நேர்மை ஆகியவை நிச்சயம் வெற்றியைத் தரும். நீயே என் உலகம். உன் நட்புக்கு நன்றி," என்று தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார் அதுல்யா.