அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த அருண் விஜய்யின் 'சினம்'

அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த அருண் விஜய்யின் 'சினம்'

1 mins read
dd166b63-d2c9-4d7b-bca7-e51b120be511
'சினம்' படத்தில் அருண் விஜய், பலக் லால்வானி. படம்: ஊடகம் -

ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் உருவாகும் 'சினம்' படத்தின் வெளியீட்டை மிக ஆவலுடன் எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார் பட நாயகன் அருண் விஜய். இதில் அவரது இணையாக பலக் லால்வானி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட் தோன்றுகிறார். 'குற்றம் 23' படத்துக்குப் பிறகு அருண்விஜய் மீண்டும் போலிஸ் வேடம் ஏற்றுள்ள படம் இது. அண்மையில் இப்படத்துக்கான பின்னணிக் குரல் பதிவுப் பணி தொடங்கியுள்ளது. அருண்விஜய் தன் பகுதிக் கான வசனங்களைப் பேசி வருகிறார். இந்தாண்டு இறுதிக்குள் படம் வெளியாக வாய்ப்புள்ளதாம்.