‌ஷ்ருதி: நான் அனை­வ­ரை­யுமே நேசிக்­கி­றேன்

பல­மான பின்­பு­லம் இருப்­ப­தா­லே திரை­யு­ல­கில் ஒரு­வர் வெற்றி பெற்­று­விட முடி­யாது என்­கி­றார் ஷ்ரு­தி­ஹா­சன்.

இணை­யம் வழி புதுப்­ப­டங்­கள் வெளி­யா­வது தம்­மைப் பொறுத்­த­வரை பெரிய வரம் என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தற்­போது இவர் நடிப்­பில் உரு­வா­கி­யுள்ள ‘யாரா’ (yaara) இந்­திப்­ப­டம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­கிறது. திக்­மன்சு ஜூலியா இயக்­கி­யுள்ள இப்­ப­டத்­தில் வித்­யூத் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் திரை­ய­ரங்­கில் படம் பார்க்க முடி­யா­தது வருத்­த­ம­ளிக்­கி­றதா என்று பல­ரும் ஷ்ரு­தி­யி­டம் கேட்­கி­றார்­க­ளாம். அவரோ, தமக்கு அப்­ப­டிப்­பட்ட வருத்­தங்­கள் ஏது­மில்லை என்­கி­றார்.

“எந்­தொரு திரைப்­ப­ட­மும் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு லாப­ம­ளிக்க வேண்­டும் என்­ப­து­தான் முக்­கி­யம். அந்த வகை­யில் ‘யாரா’ வெளி­யீடு காண்­பது மகிழ்ச்சி தரு­கிறது. உண்­மை­யைச் சொல்ல வேண்­டு­மா­னால் எனது முந்­தைய படங்­கள் எதை­யும் நான் திரை­ய­ரங்­குச் சென்று பார்த்­ததே இல்லை.

“அத­னால் நான் நடித்த படம் எத்­த­கைய தளத்­தில் வெளி­யீடு கண்­டா­லும் மகிழ்ச்­சி­தான். ரசி­கர்­க­ளின் கை­தட்­டல்­களை இதற்கு முன்­பும் நான் திரை­ய­ரங்­கில் கேட்­ட­தில்லை. எனவே இவ்­வி­ஷ­யத்­தில் எனக்கு எந்­த­வித ஏமாற்­ற­மும் இல்லை.

“கடந்த 2016ல் ‘யாரா’ படம் துவங்­கப்­பட்­டது. ஒட்­டு­மொத்த திரை­யு­ல­க­மும் கடும் பாதிப்­பு­களை எதிர்­கொண்­டுள்ள நிலை­யில் இந்­தப் படம் வெளி­யா­வது பெரிய விஷ­யம். அது­மட்­டு­மல்ல, மேலும் பர­வ­லான பார்­வை­யா­ளர்­களை இப்­ப­டம் சென்­ற­டை­வ­தும் மகிழ்ச்சி தரு­கிறது,” என்­கி­றார் ஷ்ருதி.

இந்­தப் படத்­தில் சுகன்யா என்ற 48 வயது பெண்­ணின் கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளா­ராம். கடந்த 1970களில் தொடங்கி 1990கள் வரை நடக்­கும் சம்­ப­வங்­க­ளின் தொகுப்­பாக இப்­ப­டம் உரு­வா­கிறது.

“இயக்­கு­நர் இந்­தக் கதையை விவ­ரித்­த­போது 48 வயது பெண்­ணின் கதை என்­ப­து­தான் என் மனதை வெகு­வா­கக் கவர்ந்­தது. இப்­ப­டி­யொரு கதா­பாத்­தி­ரத்­தில் நடிப்­பது எனது திற­மையை முழு­மை­யாக வெளிப்­ப­டுத்த உத­வும் எனக் கரு­தி­னேன். மேலும் இது­போன்ற சவா­லான வேடங்­கள்­தான் ரசி­கர்­கள் மன­தில் நம்மை நிலை­நி­றுத்­தும்,” என்­கி­றார் ஷ்ருதி.

‘எ கேங் ஸ்டோரி’ (A Gang Story) என்ற பிரெஞ்ச் மொழி படத்­தைத் தழுவி உரு­வா­கி­யுள்­ளது ‘யாரா’. இதற்கு முன்பு ‘ராமையா வஸ்­தா­வைய்யா’ மற்­றும் ‘கப்­பார்’ (Gabbar) படங்­களில் நடித்­த­போ­தும் அவற்­றின் மூலப் படங்­களை ஷ்ருதி பார்த்­த­தில்­லை­யாம்.

“பொது­வாக நான் பிற­ரைப் போன்று நடிக்க விரும்­பு­வ­தில்லை. மறு­ப­திப்பு படம் என்­றா­லும் நம் இயல்­புக்­கேற்ப ஒரு கதா­பாத்­தி­ரத்தை மன­தில் ஏற்­றிக்­கொண்டு திரை­யில் வெளிப்­ப­டுத்த வேண்­டும் என நினைப்­பேன். அது எனக்கு நல்ல பெய­ரையே பெற்­றுத் தந்­துள்­ளது.

“சினி­மா­வில் முதன்­மு­த­லாக கால்­ப­தித்­த­போது யாரி­டம், எப்­படி நடந்­து­கொள்ள வேண்­டும் என்­பதே தெரி­யாது. கதா­நா­ய­கர்­கள், தயா­ரிப்­பா­ளர்­கள், இயக்­கு­நர்­க­ளி­டம் எப்­ப­டிப் பேச­வேண்­டும் என்று யாரும் சொல்­லித் தந்­த­தில்லை. அத­னால் யாரி­ட­மும் சரி­யா­கப் பேசிப் பழக முடி­யா­மல் போனது.

“குறைந்­த­பட்­சம் ஊட­கப் பேட்­டி­க­ளின்­போது எப்­ப­டிப் பேச­வேண்­டும் என்­ப­து­கூட தெரி­யா­த­தால் பல நல்ல வாய்ப்­பு­க­ளை­யும் தொடர்­பு­க­ளை­யும் இழந்­தேன். அதன்­பி­ற­கு­தான் ரசி­கர்­கள் என்­னைப் பற்றி என்ன நினைக்­கி­றார்­கள் என்­பதே தெரி­ய­வந்­தது. முப்­பது வய­தைக் கடந்த பிற­கு­தான் நான் விழித்­துக் கொண்­டேன் என்று சொல்­ல­வேண்­டும்,” என்­கி­றார் ஷ்ருதி.

தற்­போது எது குறித்­தும் இவர் பதற்­ற­ம­டை­வதோ அள­வுக்­க­தி­க­மாக உற்­சா­க­ம­டை­வதோ இல்­லை­யாம். சக மனி­தர்­க­ளு­டன் எப்­போ­தும் தொடர்­பில் இருக்­க­வேண்­டும். அதி­லும் குறிப்­பாக நெருக்­க­மா­ன­வர்­க­ளு­டன் அடிக்­கடி உரை­யாட வேண்­டும் என்­பது மிக முக்­கி­யம் என்­பதை உணர்ந்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

“நான் அனை­வ­ரை­யுமே நேசிக்­கி­றேன். வாழ்க்­கைக்­குத் தேவை­யான விஷ­யங்­க­ளைக் கற்று வரு­கி­றேன். இந்­தக் கற்­றல் விரை­வாக நடந்­தி­ருப்­ப­தா­கத் தோன்­று­கிறது. எனி­னும் இந்த வேக­மும் கற்­றுக் கொண்­ட­வை­யும் நான் அமை­தி­யாக வாழ உத­வு­கின்­றன,” என்­கி­றார் ஷ்ருதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!