மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி

நடி­கர் விஜய், இயக்­கு­நர் அட்லி இரு­வ­ரும் மீண்­டும் கூட்­டணி அமைப்­ப­தாக வெளி­யான தக­வல் ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி உள்­ளது.

தற்­போது தனது அடுத்த படத்­துக்­கான பணி­களை அமை­தி­யாக கவ­னித்து வரு­கி­றார் விஜய். ‘மாஸ்டர்’ படத்­தின் பணி­கள் முடிந்து­விட்­ட­தால் ஏ.ஆர். முரு­க­தாஸ், வெற்­றி­மா­றன் ஆகி­யோ­ரது இயக்­கங்­களில் நடிப்­பதை உறுதி செய்­துள்­ளா­ராம்.

இதை­ய­டுத்தே அட்­லி­யு­டன் இணைந்து செயல்­பட திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தக­வல். அட்லி தற்­போது இந்தி நடி­கர் ஷாருக்­கானை வைத்­துப் படம் இயக்க ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

கடந்த இரண்­டாண்­டு­க­ளாக ஷாருக்­கான் எந்­தப் படத்­தி­லும் நடிக்­க­வில்லை. மேலும் கடை­சி­யாக அவர் நடித்த இரண்டு படங்­கள் பெரி­தா­கப் பேசப்­ப­ட­வில்லை.

இதை­ய­டுத்து இரு­ப­துக்­கும் மேற்­பட்ட இயக்­கு­நர்­க­ளி­டம் கதை கேட்­டும் திருப்தி அடை­யாத நிலை­யில், இயக்­கு­நர்­கள் ராஜ்­கு­மார் ஹிரா­னி­யும் அட்­லி­யும் சொன்ன கதை­கள் அவ­ருக்­குப் பிடித்­துப் போனது.

முத­லில் ராஜ்­கு­மார் படத்­தி­லும் பின்­னர் அட்லி இயக்­கத்­தி­லும் நடிக்க உள்­ளார் ஷாருக். இதற்­கான ஒப்­பந்­தங்­கள் போடப்­பட்டு அட்லி முன்­ப­ண­மும் வாங்­கி­விட்­டா­ராம்.

ஷாருக்­கான் படத்தை இயக்கி முடித்த பின்­னர் அட்லி கோடம்­பாக்­கம் திரும்­பு­வ­தற்­கும் முரு­க­தாஸ், வெற்­றி­மா­றன் படங்­களில் விஜய் நடித்து முடிப்­ப­தற்­கும் சரி­யாக இருக்­கும் என்­கி­றார்­கள் கோடம்­பாக்க விவ­ரப் புள்­ளி­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!