விஜய் தன்மையானவர் என்கிறார் மாளவிகா

விஜய் தன்மையானவர் என்கிறார் மாளவிகா

3 mins read
cab71a0a-9a0b-4db7-95e9-f38bb0e7f92a
மாளவிகா மோகனன். படம்: ஊடகம் -

பெரிய கொண்­டாட்­டங்­கள் இல்லை என்­றா­லும், இந்­தாண்டு தமது பிறந்த நாள் அமை­தி­யா­க­வும் மன­நி­றை­வு­ட­னும் கழிந்­த­தா­கச் சொல்­கி­றார் மாள­விகா மோக­னன்.

'மாஸ்­டர்' படத்­தில் விஜய் ஜோடி­யாக ஒப்­பந்­த­மான அந்த நொடி முதலே தமிழ் சினிமா ரசி­கர்­கள் நன்கு அறிந்த முக­மாக இவர் மாறி­விட்­ட­தும் விஜய் ரசி­கர்­கள் இவ­ரைக் கொண்­டா­டு­வ­தும் தெரிந்த விஷ­யம்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி தமது பிறந்த நாளை 'மாஸ்­டர்' படக்­கு­ழு­வு­டன் கொண்­டாட வேண்­டும் என்­ப­து­தான் மாள­வி­கா­வின் திட்­ட­மாம். ஆனால் கொரோனா விவ­கா­ரம் அவ­ரது கனவு நிறை­வேறா­மல் தடுத்­து­விட்­டது. இந்­தக் கோபத்­தில் 'கொரோனா ஒரு முட்­டாள்' என விமர்­சித்து தமது சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார் மாள­விகா.

பிறந்­த­நா­ளை­யொட்டி திரை­யு­ல­கப் பிர­ப­லங்­கள் பல­ரும் இவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்த நிலை­யில், 'மாஸ்­டர்' படக்­குழு சார்­பாக திடீ­ரென சமூக வலைத்­த­ளங்­களில் சுவ­ரொட்டி ஒன்று வெளி­யி­டப்­பட்­டது. அதில் விஜய்­யும் மாள­வி­கா­வும் இடம்­பெற்­றி­ருந்­த­னர்.

சுவரொட்டி வெளியான அடுத்த சில நிமி­டங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் அதைப் பார்த்து, மிக நன்­றாக இருப்­ப­தா­கக் குறிப்­பிட்டு, மாள­வி­கா­வுக்கு பிறந்­த­நாள் வாழ்த்­தும் தெரி­விக்க, நெகிழ்ந்து போய்­விட்­டா­ராம்.

இந்­தச் சுவ­ரொட்டி வெளி­யீடு குறித்து முன்பே விஜய்­யி­டம் தக­வல் தெரி­வித்து, அவ­ரது ஒப்­பு­த­லு­டன்­தான் வெளி­யிட்­டுள்­ளார் இயக்­கு­நர் லோகேஷ் கன­க­ராஜ்.

இதை அறிந்­த­தும் மாள­வி­கா­வின் மகிழ்ச்சி இரட்­டிப்­பாகி விட்­டது.

"இது நான் சற்­றும் எதிர்­பா­ராத பிறந்தநாள் பரிசு. இதற்­காக படக்­கு­ழு­வுக்கு என் நன்றி. விஜய் சார் பெருந்­தன்மை மிக்­க­வர்," என்­கி­றார் மாள­விகா.

சமூக வலைத்­த­ளத்­தில் ரசி­கர்­க­ளு­டன் சில நிமி­டங்­கள் உரை­யா­டியபோது, 'மாஸ்­டர்' பட அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்து கொண்­டார். முந்­தைய பேட்­டி­களில் குறிப்­பிட்­டது போன்றே, "விஜய் மிக எளி­மை­யான மனி­தர். எளி­தில் அணு­கக்­கூ­டி­ய­வர். அவ­ரு­ட­னும் ரஜினி சாரு­ட­னும் அடுத்­த­டுத்து நடித்­தது எனது அதிர்ஷ்­டம்," என்று குறிப்­பிட்­டார் மாள­விகா.

'மாஸ்­டர்' படத்­தின் கதை குறித்­தும் அதில் இவ­ரது கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் குறித்­தும் ஒரு ரசி­கர் விவ­ரம் கேட்க, "எனது கதா­பாத்­தி­ரம் 'சி' என்ற ஆங்­கில எழுத்­தில் துவங்­கும். கதை குறித்து ஏதும் சொல்ல இய­லாது. இதற்­கும் மேல் நான் ஏதா­வது பேசி­னால் இயக்­கு­நர் லோகேஷ் என்­னைக் கொன்­றே­வி­டு­வார்," எனப் பதி­ல­ளித்­தார் மாள­விகா.

"பிறந்­த­நா­ளன்று சுவ­ரொட்டி வெளி­யிட்டு என்னை ஆச்­ச­ரி­யத்­தில் மூழ்­க­டித்த இயக்­கு­நர் லோகே­ஷுக்கு எனது நன்றி. முட்­டாள் கொரோ­னா­வால் எனது பிறந்­த­நாளை படக்­கு­ழு­வு­டன் செல­விட முடி­யா­மல் போனது. கொரோனா எனது திட்­டங்­களை மாற்­றி­விட்­டது. எனி­னும் அனை­வ­ரது அன்­புக்­கும் நன்றி," என்று மாள­விகா தமது சமூக வலைத்­த­ளப் பதி­வில் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமி­ழில் இவரை புதுப்­ப­டங்­களில் ஒப்­பந்­தம் செய்ய தயா­ரிப்­பா­ளர் பலர் காத்­தி­ருக்­கின்­ற­னர். எனி­னும் எந்­தப் படத்­தி­லும் அவர் இது­வரை ஒப்­பந்­த­மா­க­வில்­லை­யாம்.

"முத­லில் நடித்து முடித்­துள்ள படங்­கள் வெளி­யா­கட்­டும் எனக் காத்­தி­ருக்­கி­றேன். அவ­சர கதி­யில் செயல்­பட வேண்­டிய அவ­சி­யம் இல்லை. ஒட்­டு­மொத்த உல­க­மும் முடங்­கி­யுள்ள இந்த வேளை­யில் எனக்­கான வாய்ப்­பு­கள் எங்­கே­யும் போய்­வி­டாது என நம்­பு­கி­றேன்.

"தமிழ் ரசி­கர்­க­ளின் ஆத­ரவு கிடைத்­தால் அதுவே போது­மா­னது. தொடர்ந்து வெற்­றிப் படங்­க­ளி­லும் நல்ல கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும் நடிக்க வேண்­டும் என விரும்­பு­கி­றேன்.

"கொரோனா மறைந்த பிறகு அதுவே எனது இலக்­காக இருக்­கும். அது­வரை பொறு­மை­யா­கக் காத்­தி­ருப்­பேன்," என்று திட்­ட­வட்­ட­மா­கப் பேசு­வது போலவே திட்­ட­மிட்­டுச் செயல்­ப­டு­கி­றார் மாள­விகா மோக­னன்.