சுடச் சுடச் செய்திகள்

வெங்கட் பிரபு: அஜித், விஜய் இணைவது சாத்தியம்தான்

தமிழ்த் திரை­யு­லக ரசி­கர்­கள் எதிர்­பார்த்து காத்­துக்கொண்­டி­ருப்­பது எப்­போது அஜித்­தும் விஜய்­யும் இணைந்து நடிப்­பார்­கள் என்­பது தான். தொடக்கத்தில் ‘ராஜா­வின் பார்­வை­யிலே’ படத்­தில் நடித்த இரு­வ­ரும் மீண்­டும் அதன் பிறகு இணைந்து நடிக்­க­வில்லை.

‘நேருக்கு நேர்’ படத்­தில் விஜய்யும் அஜித்தும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர். கால்­ஷீட் பிரச்­சினை கார­ண­மாக அஜித்­தால் தொட­ர­முடி­ய­வில்லை. அதன் பிறகு­தான் சூர்யா இணைந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இரண்டு பெரிய நட்­சத்­தி­ரங்­கள் இணை­யும்­போது கால்­ஷீட் ஒதுக்­கு­வது, நடி­கர், நடி­கை­யர் தேர்வு, ஊதி­யம், படத் தயா­ரிப்­புச் செலவு எல்­லாம் ‘பாகு­பலி’யை மிஞ்­சி­வி­டும். இதற்கு முன் பெரிய இயக்­கு­நர்­கள் இதற்­கான முயற்­சி­களை மேற்­கொண்ட போது சம்­பந்­தப்­பட்ட நடி­கர்­கள் ஒப்­புக்­கொண்ட நிலை­யில், சூழ்­நிலை அமை­ய­வில்லை.

இந்­நி­லை­யில் அஜித், விஜய் இரு­வ­ரை­யும் ஒரே படத்­தில் நடிக்க வைக்க தம்­மி­டம் சில யோச­னை­கள் இருப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார் இயக்­கு­நர் வெங்­கட் பிரபு.

இவ­ரது இயக்­கத்­தில் அஜித் நடிப்­பில் வெளி­யாகி பெரும் வர­வேற்­பைப் பெற்ற படம் ‘மங்­காத்தா’. அந்­தப் படத்­தின் படப்­பி­டிப்­புக்கு இடை­யே­தான் சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு அஜித், விஜய் சந்­திப்பு நடை­பெற்­றது.

அச்­ச­ம­யம் ‘வேலா­யு­தம்’ படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருந்­தார். இரு படங்­க­ளின் படப்­பி­டிப்பு அரு­க­ருகே நடை­பெற்­ற­தால் அஜித்­தும் விஜய்­யும் சந்­திப்­பது சாத்­தி­ய­மா­னது. இந்­நி­லை­யில் இரு­வ­ரை­யும் திரை­யில் ஒன்று சேர்க்­கப் போவது யார் என்­பது தமக்­குத் தெரி­ய­வில்லை என்­கி­றார் வெங்­கட்.

“அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்­குமா என்­ப­தும் எனக்­குத் தெரி­யாது. எனி­னும் இரு­வ­ரை­யும் இணைந்து நடிக்க வைக்க என்­னி­டம் சில யோச­னை­கள் இருக்­கின்­றன. ஆனால், அவர்­கள் இரு­வ­ரும் ஒப்­புக்­கொண்­டால் மட்­டுமே அதை முன்­னோக்­கிக் கொண்டு செல்ல முடி­யும்.

“‘மங்­காத்தா’ படப்­பி­டிப்­பில் இரு­வ­ரும் சந்­தித்­துப் பேசி­ய­போது ஒரு திட்­டத்தை விவ­ரித்­தேன். இரு­வ­ரும் அதை ஏற்­றுக்கொண்­ட­னர்,” என்­கி­றார் வெங்­கட் பிரபு.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon