சுடச் சுடச் செய்திகள்

நன்றி தெரிவித்த ரகுல் பிரீத்

ரகுல் பிரீத்சிங் வானத்­துக்­கும் பூமிக்­கு­மாக குதித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். கார­ணம், இன்ஸ்­ட­கி­ரா­மில் இவ­ரைப் பின்­தொ­டர்­ப­வர்­களின் எண்­ணிக்கை புதிய சாதனை படைத்­தி­ருக்­கிறது.

சுமார் 15 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் இன்ஸ்­ட­கி­ரா­மில் ரகுல் பிரீத்­சிங்­கை தீவி­ர­மா­கப் பின்­தொ­டர்­கின்­ற­னர். இது ரசி­கர்­கள் தன்­மீது வைத்­துள்ள அன்பை வெளிப்­படுத்­து­கிறது என்­கி­றார் ரகுல்.

இதை­ய­டுத்து காணொ­ளிப் பதிவு ஒன்றை வெளி­யிட்­டுள்ள அவர், ரசி­கர்­களின் அன்பு தம்மை நெகிழ வைத்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார். மேலும் ரசி­கர்­க­ளு­ட­னான உரை­யா­ட­லின்­போது எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்­கும் பதில் அளித்­துள்­ளார்.

“சமூக வலைத்­த­ளங்­களில் இணை­வ­தற்கு முன்பு அது­கு­றித்து எனக்கு எது­வும் தெரி­யாது.

“எல்­லோ­ரை­யும்­போல் நானும் அவற்­றில் இயங்­கி­னேன். திரை­யு­ல­கி­லும்­கூட அறி­மு­க­மான புதி­தில் எனது வேலை, திறமை குறித்து அதி­கம் அறிந்­தி­ருக்­க­வில்லை.

“ஆனால், இத்­தனை ரசி­கர்­கள்­தான் எனக்கு வழி­காட்டி உள்­ள­னர். இவர்­க­ளின் ஆத­ரவு இல்­லா­மல் எது­வும் சாத்­தி­ய­மாகி இருக்­காது,” என்று காணொ­ளிப் பதி­வில் நெகிழ்ச்­சி­யு­டன் குறிப்­பிட்­டுள்­ளார் ரகுல்.

சகோ­த­ரத்­து­வத்தை வலி­யு­றுத்­தும் ரக்­‌ஷா­பந்­தன் நிகழ்வை ஒட்டி தமது சகோ­த­ரர் அமன் பிரீத்­து­டன் இணைந்து மற்­றொரு காணொ­ளியை வெளி­யிட்­டுள்ள அவர், அம­னைப்­போலவே தமக்கு ஏரா­ள­மான சகோ­த­ரர்­கள் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

“ரசி­கர்­க­ளுக்கு எப்­படி நன்றி சொல்­வது என்று தெரி­ய­வில்லை. எனது லட்­சக்­க­ணக்­கான ரசி­கர்­கள் வாழ்­நாள் முழு­வ­தும் சிரிப்பு­ட­னும் மகிழ்ச்­சி­யு­ட­னும் இருக்­க­வேண்­டும்.

“நான் நூறு விழுக்­காடு திற­மை­யுள்ள நடிகை என்று சொல்­ல­மாட்­டேன். எனி­னும் அந்த இலக்கை நோக்­கிச் செல்­வேன். அதன்­மூ­லம் ரசி­கர்­க­ளை­யும் மகிழ்­விப்­பேன். சமூக வலைத்­தளங்­கள் மூல­மா­கவே எனது ரசி­கர்­க­ளைப் பாசத்­து­டன் அணைக்­கி­றேன்,” என்று ரகுல் பிரீத்­சிங் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே சூர்­யா­வின் ‘சூர­ரைப் போற்று’ படத்­தில் இடம்­பெற்­றுள்ள பாட­லுக்கு இணை­யத்­தில் பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

இந்­திய அள­வில் முன்­ன­ணி­யில் உள்ள திரைப்­பா­டல்­க­ளின் பட்­டி­யலை யூடி­யூப் இந்­தியா வெளி­யிட்­டுள்­ளது. அதில் இந்தி, தெலுங்கு எனப் பல்­வேறு மொழி­களில் வெளி­யாகி உள்ள திரைப்­ப­டங்­க­ளின் பாடல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

அத்­த­கைய பட்­டி­ய­லில் ‘சூர­ரைப் போற்று’ படத்­தில் இடம்­பெற்­றுள்ள ‘காட்­டுப்­ப­யலே’ பாடல் 28வது இடத்­தைப் பிடித்­துள்­ளது. இதை­ய­டுத்து இப்­பா­ட­லுக்கு இசை­ய­மைத்த ஜி.வி.பிர­கா­ஷுக்கு சூர்யா நன்றி தெரி­வித்­துள்­ளார்.

“ஒவ்­வொரு முறை­யும் ஜி.வி. பிர­காஷ் தம்­மைப் புதுப்­பித்­துக்கொள்­வது வெகு­வா­கக் கவர்­கிறது,” என்­கி­றார் சூர்யா.

இதற்­கி­டையே மேலும் பல திரைப்­பி­ர­ப­லங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் பின்­தொ­டர்­வோ­ரின் எண்­ணிக்கை கடந்த நான்கைந்து மாதங்­களில் வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளது.

நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்­ட­கி­ராம் தளத்­தில் சமந்­தாவை முந்­தி­விட்­ட­தாக ஒரு தக­வல் அண்­மை­யில் வெளி­யா­னது. ஆனால், இது உண்­மை­யல்ல என்று சமந்­தா­வின் ரசிகர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தமி­ழில் நடித்­து­வ­ரும் நிக்கி கல்­ராணி, பிரியா பவானி சங்­கர், வாணி போஜன் உள்­ளிட்­டோ­ரும் சமூக வலைத்­த­ளங்­களில் பிரப­ல­மாகி வரு­கின்­ற­னர்.

இவர்­களில் பெரும்­பா­லா­னோர் ரசி­கர்­க­ளு­ட­னான நேரடி உரை­யா­டல்­க­ளையே விரும்­பு­கிறார்­க­ளாம். மேலும் காணொ­ளித் தொகுப்­பு­கள், கவர்ச்­சிப் படங்­களை தொடர்ந்து வெளி­யி­டு­தல், சமூக விவ­கா­ரங்­கள் குறித்து கருத்து தெரி­வித்­தல் என்று பர­ப­ரப்­பாக இயங்கி வரு­கின்­ற­னர்.

இத­னால் சமூக வலைத்­த­ளப் பக்­கங்­க­ளைப் பார்­வை­யி­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தா­கத் தக­வல்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon