'கதாபாத்திரத்தின் ஆழமே முக்கியம்'

'கதாபாத்திரத்தின் ஆழமே முக்கியம்'

1 mins read
98b90683-dba5-417b-92c9-7c554c7ba420
அதிதி ராவ் -

குறைந்த பொருட்செலவில் உருவான சிறு படங்களில் நடித்ததன் மூலம்தான் தம்மால் பிரபலமாக முடிந்தது என்கிறார் அதிதி ராவ்.

அண்மைய சமூக வலைத்தளப் பதிவில் மும்பையில் இருந்து தாம் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாய்ப்புகள் எங்கு அழைத்துச் செல்கின்றவோ அங்கு தாம் செல்வதாகவும், தென்னிந்திய மொழிகளில் அதிக வாய்ப்புகள் கிடைப்பதால் அவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் கூறுகிறார் அதிதி.

பாலிவுட்டில் நான் நடித்துள்ள 'தி கேர்ள் ஆன் தி டிரைய்ன்' படம் விரைவில் வெளிவர இருக்கிறது. சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதாக சொல்கிறார்கள். நான் சின்ன படங்களில் இருந்து வந்தவள். நான் ஏற்கும் கதாபாத்திரம் எவ்வளவு நீளமானது என்பது எனக்கு முக்கியமல்ல. அதன் ஆழம்தான் முக்கியம்," என்கிறார் அதிதி.