பார்வதியின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாம்

பார்வதியின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாம்

1 mins read
a5ee8d50-7f66-482b-a17e-364c3ae60ff2
பார்வதி மேனன். படம்: ஊடகம் -
multi-img1 of 2

தமது நீண்ட நாள் ஆசையை கொரோனா ஊரடங்கு நிறைவேற்றி இருப்பதாக உற்சாகப்படுகிறார் நடிகை பார்வதி மேனன்.

வேறொன்றுமில்லை, மூக்குத்தி மீது இவருக்குத் தீராத காதலாம். ஆனால், மூக்கு குத்திக்கொள்ள இதுவரை நேரமே அமையவில்லையாம்.

இந்நிலையில் மூக்கு குத்தும் பொற்கொல்லரை வீட்டிற்கே வரவழைத்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார் பார்வதி.

"என் அம்மாவுக்கு மூக்குத்தி மிக எடுப்பாக அழகாக இருக்கும். அதனால்தான் நானும் மூக்கு குத்திக்கொள்ள விரும்பினேன்.

"ஊரடங்கு நேரத்தில் இது தேவையா என்று சிலர் கேட்கக்கூடும். தகுந்த பாதுகாப்புடன்தான் இந்தச் செயலில் ஈடுபட்டேன்," என்று பார்வதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் மூக்குத்தி அணிந்துள்ள தமது தாயாரின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.