கர்ணனின் இறுதிக் காட்சிகளில் மாற்றம்

கர்ணனின் இறுதிக் காட்சிகளில் மாற்றம்

1 mins read
a594db31-c34d-41ab-bb6d-9caea948ff69
தனு‌ஷ், படம்: ஊடகம் -

தனுஷ் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'கர்ணன்' திரைப்படத்தின் இறுதிக் காட்சியைத் தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஊரடங்கு அமலுக்கு வந்தது.

கதைப்படி இறுதிக் காட்சியில் பல வீடுகள் எரிந்து சாம்பலாவது போலவும் 500க்கும் மேற்பட்டவர்கள் அந்தக் காட்சியில் நடிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி பல வீடுகள் தற்காலிகமாகக் கட்டப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் 500 நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது என்பதால் படத்தின் இறுதிக் காட்சியை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.