'பாகுபலி' வில்லனுக்குத் திருமணம்

'பாகுபலி' வில்லனுக்குத் திருமணம்

1 mins read
7f1fdfca-1490-49b0-b3a9-fc81cbd5fd48
-

தெலுங்குத் திரையுலகின் அந்தக் கால பிரபல தயாரிப்பாளரான ராமா நாயுடுவின் மகன் வயிற்று பேரன் ராணா டக்குபதி. இவரின் சித்தப்பா வெங்கடேஷ் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வந்தவர். இவரின் அத்தை மகன்தான் நாக சைதன்யா. தெலுங்குத் திரையுலகில் பல கோடி சொத்துகளுக்கு அதிபதி ராமா நாயுடுவின் குடும்பம்.

'டோலிவுட்' நடிகர்கள் பலர் இவரது சொந்தக்காரர்கள். ராணா பற்றி திரையுலகில் அவ்வப்போது காதல் கிசுகிசுக்கள் வருவது வழக்கம். சில நடிகைகளுடன் இணைத்தும் பேசப்பட்டார். திடீரென மே மாதம் தனக்கும் மிஹிகா பஜாஜ் என்பவருக்கும் காதல் என அறிவித்தார். உடனடியாக இருவரது குடும்பத்தினரும் திருமண வேலைகளை ஆரம்பித்தனர். திருமணம் ராணா குடும்பத்தினரின் ராமா நாயுடு ஸ்டுடியோவில் தெலுங்கு முறைப்படி நேற்று இரவு சிங்கப்பூர் நேரப்படி 10 மணிக்கு மேல் நடக்கவிருந்தது. திருமணத்திற்கு முன்பு தான் தயார் என்பதைக் குறிக்கும் வகையில் தனது அப்பா சுரேஷ் பாபு, சித்தப்பாவான நடிகர் வெங்கடேஷ் ஆகியோருடன் இணைந்திருக்கும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு 'ரெடி' எனக் குறிப்பிட்டிருந்தார் ராணா.