ரூ.25 லட்சம் நிதியளித்த ஜோதிகா

ரூ.25 லட்சம் நிதியளித்த ஜோதிகா

1 mins read
1be3a63b-faeb-4b8d-8b69-eb2ce5634049
ஜோதிகா. படம்: ஊடகம் -

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார் ஜோதிகா. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை சென்றிருந்தார் ஜோதிகா. அப்போது அங்குள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்ததாகவும் அங்கு பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் பெண்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் கூடுதல் வசதிகளும் உதவிகளும் தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இது சர்ச்சையாக மாறியது. சில தரப்பினர் ஜோதிகாவை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் அம்மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காகவும் இதர வசதிகளைச் செய்து கொடுக்கவும் ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார். வெறும் பேச்சுடன் நிற்காமல் செயலிலும் ஈடுபட்டதை அடுத்து பலரும் இவரைப் பாராட்டி வருகின்றனர்.