சுடச் சுடச் செய்திகள்

முரளிக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி

இலங்கை கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பது தெரியும். இப்படத்துக்கு ‘800’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

உலக கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் முரளி. அதைக் குறிக்கும் வகையில் இத்தலைப்பு தேர்வாகி உள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக சிறப்புப் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார் விஜய் சேதுபதி. குறிப்பாக உடல் எடையைக் குறைக்கப் போகிறாராம்.

இந்நிலையில் முரளிதரன் தீவிர ரஜினி ரசிகர் என்பது தெரியவந்துள்ளது. அண்மைய பேட்டி ஒன்றில் தமக்குப் பிடித்த படம் ரஜினி நடித்த ‘சிவாஜி’ என்று குறிப்பிட்ட முரளிதரனிடம், மேலும் ஒரு பிடித்த திரைப்படத்தை குறிப்பிடுமாறு கேட்கப்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ என்று அவர் பதிலளித்தார். இது தமக்கு மகிழ்ச்சி அளித்ததாகச் சொல்கிறார் சேதுபதி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon