எஸ்.ஜே. சூர்யா, பிரியா மீண்டும் இணையும் 'பொம்மை'

எஸ்.ஜே. சூர்யா, பிரியா மீண்டும் இணையும் 'பொம்மை'

1 mins read
1cf821e4-7208-45d5-a4df-574bf3ed1892
எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்­கர் -

எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்­கர் இரு­வ­ரும் மீண்­டும் ஒரு படத்­தில் இணைந்து நடிக்­கின்­ற­னர். ராதா மோகன் இயக்­கத்­தில் உரு­வா­கும் அப்­ப­டத்­துக்கு 'பொம்மை' என தலைப்பு வைத்­துள்­ள­னர்.

ஜாஸ்­மின் சந்­தோஷ், தீபா டி.துரை தயா­ரித்­துள்ள இப்­ப­டத்தில் சாந்­தினி, 'டவுட்' செந்­தில், ஆரோல் சங்­கர் ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர்.

யுவன் சங்­கர் ராஜா இசை­யமைக்க, ரிச்­சர்ட் எம்.நாதன் ஒளிப்­ப­திவை மேற்­கொள்­கி­றார்.

"ராதா­மோ­கன் படம் என்­றால் குடும்­பத்­து­டன் அமர்ந்து பார்க்­க­லாம் என்­பது ரசி­கர்­க­ளுக்கு நன்கு தெரி­யும். அவ­ருக்கு தர­மான ரசி­கர்­கள் உள்­ள­னர்.

"இந்­தப் படத்­தின் மூலம் அவர் சரா­சரி ரசி­கர்­க­ளை­யும் சென்­றடை­வார் என்­ப­தில் எந்தவித சந்தேகமும் இல்லை.

"நேர்த்தி என்­ப­தற்கு எல்­லையே கிடை­யாது. நம்­மால் எந்­த­ளவு முடி­யுமோ அந்­த­ள­விற்கு எதை­யும் நம் அறி­வுத்­தி­ற­னுக்கு ஏற்ப நேர்த்­தி­யா­கச் செய்­ய­லாம். இதற்கு ராதா­மோ­கன் சிறந்த உதா­ர­ணம்.

"அவ­ரது அர்ப்­ப­ணிப்­பும் உழைக்­கும் பாணி­யும்­தான் என்னை இப்­ப­டத்­தில் நடிக்க வைத்­தது. இந்தத் தரமான படைப்பு விரைவில் வெளியீடு காணும்," என்­கி­றார் எஸ்.ஜே. சூர்யா.