வணிகப் படத்தில் நடிக்க எனக்கும் ஆசை என்கிறார் வி‌‌ஷ்ணு வி‌ஷால்

வணிகப் படத்தில் நடிக்க எனக்கும் ஆசை என்கிறார் வி‌‌ஷ்ணு வி‌ஷால்

1 mins read
50697e07-5958-4b1f-8567-e3f3455fcb92
வி‌ஷ்ணு வி‌ஷால். படம்: ஊடகம் -

'வணிகப் படங்களில் நடிக்கவேண்டும் எனும் ஆசை அனைத்து கதாநாயகர்களுக்கும் இருக்கிறது என்கிறார் விஷ்ணு விஷால்.

பொது இடங்களுக்குச் செல்லும்போது தங்களை வரவேற்கவும் வேடிக்கை பார்க்கவும் பெரும் கூட்டம் கூட வேண்டும் எனும் ஆசையும் நாயகர்களுக்கு உண்டு என அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு நினைக்கவில்லை என்று ஒரு முன்னணி நடிகர் சொல்கிறார் என்றால், அவர் பொய் சொல்வதாக அர்த்தம் என்றும் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

"அதனால் பல நடிகர்கள் இரண்டு கதையம்சமுள்ள நல்ல படங்களில் நடித்த பிறகு திடீரென சம்பந்தமே இல்லாமல் ஒரு நகைச்சுவை அல்லது வணிகப் படத்தில் நடிப்பார்கள். நானும் இதற்கு விதிவிலக்கல்ல," என்கிறார் விஷ்ணு விஷால்.