அண்மைய சில வாரங்களாக திரையுலகத்தினர் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார் நடிகை மீரா மிதுன்.
குறிப்பாக நடிகர்கள் விஜய், சூர்யா குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது ரசிகர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் விஜய் மனைவி சங்கீதா, சூர்யாவின் மனைவி ஜோதிகா குறித்தும் மீரா மிதுன் சில கருத்துகளை தெரிவிக்க, திரையுலகத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், மீரா மிதுன் மீது விஜய் ரசிகர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். விஜய் குறித்து தரக்குறைவாக விமர்சித்ததற்காக மீரா மன்னிப்பு கோர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே சூர்யாவின் ரசிகர்களும் மீரா மீது புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனராம்.
முன்னதாக நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் தனது பாணியை அப்பட்டமாக காப்பியடித்து பின்பற்றுவதாகவும் மீரா தெரிவித்திருந்தார். இதுவும் சர்ச்சையாகி உள்ளது.

