‘உலகைச் சுற்ற ஆசை’

கடந்த ஒன்­ப­தாம் தேதி தனது பிறந்­த­நாளை அமை­தி­யா­கக் கொண்­டா­டி­யுள்­ளார் ஹன்­சிகா. நெருக்­க­மான சிலர் தொலை­பேசி வழி வாழ்த்து தெரி­வித்­துள்­ள­னர்.

ஆனால் அதை­யெல்­லாம்­விட சமூக வலைத்­த­ளங்­களில் ரசி­கர்­கள் வாழ்த்து மழை­யா­கப் பொழிந்து தள்­ளி­னர். அது­தான் தம்மை வெகு­வாக உற்­சா­கப்­ப­டுத்­தி­யது என்­கி­றார்.

தற்­போது ஹாலி­வுட் நாய­கி­கள் போல் உடல் மெலிந்து காணப்­ப­டு­கி­றார் ஹன்­சிகா.

அண்­மைக்­கா­ல­மாக இவரை நேரில் சந்­திக்­கும் அனை­வ­ருமே மறக்­கா­மல் எழுப்­பும் கேள்வி, “எப்­படி இந்­த­ளவு உடல் இளைக்க முடிந்­தது?” என்­ப­து­தான்.

ஹன்­சி­கா­வும் அந்த ரக­சி­யத்தை விலா­வா­ரி­யாக விவ­ரிக்­கி­றார். இத்­த­னைக்­கும் உண­வுக் கட்­டுப்­பா­டு­கள் எதை­யும் பின்­பற்­ற­வில்­லை­யாம். எல்­லாம் உடற்­பயிற்சி செய்த மாய­மாம்.

தனது ஐம்­ப­தா­வது பட­மான ‘மஹா’வை எப்­ப­டி­யா­வது வெற்­றிப்­ப­டைப்­பாக உரு­வாக்கவேண்­டும் என்­ப­தில் முனைப்­பாக இருப்­ப­வர், அண்­மை­யில் இணை­யத்­தொ­டர் ஒன்­றில் நடிக்­க­வும் ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

போதாத குறைக்கு யூடி­யூப் தளத்­தி­லும் பர­ப­ரப்­பாக இயங்­கு­வ­தால் கொரோனா ஊர­டங்கு வேளை­யி­லும் ஹன்­சி­காவை கையில் பிடிக்க முடியவில்லை.

ஓய்­வாக இருக்­கும்­போதே பல விஷ­யங்­களை ரசி­கர்­க­ளு­டன் பகிர்ந்து கொள்­ளும் வகை­யில் தனது கைபே­சி­யைப் பயன்­ப­டுத்தி சிறு காணொ­ளிப் பதி­வு­களை உரு­வாக்கி வரு­கி­றா­ராம்.

“திரை­யு­ல­கம் மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கி­ய­தும் நேரம் கிடைக்­காது. அத­னால்­தான் கிடைத்த ஓய்­வைப் பயன்­ப­டுத்­திக் கொள்­கி­றேன்.

“தொடர்ந்து காணொ­ளி­களை வெளி­யிட்டு, ரசி­கர்­க­ளு­டன் ஒரு­சில நிமி­டங்­கள் பேசி­னால் அவர்­க­ளுக்­கும் உற்­சா­க­மாக இருக்­கும்,” என்­கி­றார் ஹன்­சிகா.

விமா­னப் பய­ணம் என்­றால் ரொம்­பப் பிடிக்­கும் என்று சிறு குழந்­தை­யைப் போல் உற்­சா­க­மாக சொல்­ப­வ­ருக்கு, உல­கம் முழு­வ­தும் சுற்றி வர வேண்­டும் என்று ஆசை­யாம். தின­மும் விமா­னப் பய­ணம் மேற்­கொள்ளவேண்­டும் என்­றா­லும் தயார் என்­கி­றார். அப்­ப­டிப்­பட்ட தன்னை கொரோனா கிருமி வீட்­டி­லேயே கட்­டிப்­போட்டு விட்­டது என்பது­தான் ஹன்­சி­கா­வின் அண்­மைய புலம்­பல்.

சரி... ஊர­டங்­கின்­போது என்ன செய்­கி­றா­ராம்?

“முத­லில் நான் உடல் மெலிந்­தது தொடர்­பான ரக­சி­யத்­தைச் சொல்­கி­றேன். எல்­லோ­ரும் நான் பட்­டினி கிடந்து உடல் இளைத்­த­தாக நினைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அது தவறு.

“உண்­மை­யில் நான் சாப்­பாட்­டுப் பிரியை. எந்­தக் கட்­டுப்­பா­டும் இல்­லா­மல் மன­துக்­குப் பிடித்­த­தைச் சாப்­பி­டு­வேன். ஆனால் உடற்­ப­யிற்சி என்று வந்­து­விட்­டால் எந்த சம­ர­ச­மும் கிடை­யாது. ஒரு­நாள் தவ­றா­மல் உடற்­ப­யிற்சி செய்­வேன்,” என்று சொல்­லும் ஹன்­சிகா தின­மும் குறைந்­த­பட்­சம் எழு கிலோ­மீட்­டர் தூரம் மெது­வோட்­டம் செல்­கி­றார்.

வாரத்­தில் மூன்று நாள் யோகா செய்­யும் இவ­ருக்கு தனி உடற்­ப­யிற்­சி­யா­ள­ரும் உள்­ளார். உடற்­ப­யிற்சி, யோகா ஆகிய இரண்­டும்­தான் இவ­ரது ஆரோக்­கி­யத்­தைக் காக்­கும் இரு தூண்­க­ளாம்.

பெரிய பக்தை என்று சொல்ல முடி­யா­விட்­டா­லும், ஹன்­சி­கா­வுக்கு ஆன்­மி­கத்­தி­லும் ஓர­ளவு ஈடு­பாடு உள்­ளது.

“ஆன்­மிக அனு­ப­வம் என்­பது ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் வெவ்­வேறு வித­மாக அமை­யும். எனக்கு ஆன்மி­கத்­தில் ஆர்­வம் என்று சொல்­வ­தை­விட, கர்மா­வின் மீது அதிக நம்­பிக்கை உண்டு என்று சொல்­ல­லாம். என்­ன­தான் கட­வுள் மீது நாம் பெரும் பக்தி கொண்­டி­ருந்­தா­லும், விதிப்­படி நடப்­பதை மாற்ற இய­லாது. இதை அதி­கம் நம்­பு­கி­றேன்,” என்று சொல்­லும் ஹன்­சிகா சிறு வய­தில் தொலைக்­காட்சி தொடர்­க­ளி­லும் சில இந்­திப் படங்­க­ளி­லும் நடித்­த­வர்.

இந்த ஊர­டங்­கின்­போது பழைய நினை­வு­களை மன­தில் அசை­போட்­டா­ராம். ஹிருத்­திக் ரோஷன், பிரீத்தி ஜிந்தா இணைந்து நடித்த ‘கோயி மில்க்யா’ இந்­திப் படத்­தில் ஹன்­சிகா குழந்தை நட்­சத்­தி­ர­மா­கத் தோன்­றி­னார்.

“இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்­புக்­காக கனடா சென்­றி­ருந்­தோம். அப்­போது என்­னு­டைய பிறந்­த­நாள் வந்­தது. இதை தெரிந்துகொண்ட படக்­கு­ழு­வி­னர் பிறந்­த­நாளை கொண்­டா­டி­னர். இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அந்­தப் படம் எனது பிறந்த நாளன்­று­தான் வெளி­யா­னது. அந்த இனி­மை­யான நாட்­க­ளை­யும் அனு­ப­வங்­க­ளை­யும் மறக்­கவே இய­லாது,” என்­கி­றார் ஹன்­சிகா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon