காட்டுக்குள் சிக்கும் இளம் ஜோடி

‘துரு­வங்­கள் பதி­னாறு’, ‘ராட்­ச­சன்’ உள்­ளிட்ட படங்­க­ளின் வரி­சை­யில் இணைய உள்­ளது ‘தட்­பம் தவிர்’.

முழு நீள திகில் கதை­யாக உருவா­கி­யுள்ள இப்­ப­டத்­தின் முக்­கிய காட்­சி­களை கோவா­வில் உள்ள அடர்ந்த வனப்­ப­கு­தி­யில் பட­மாக்கி உள்­ள­னர்.

‘கந்­தக்­கோட்டை’, ‘ஈகோ’ படங்­களை இயக்­கிய தயா­ரிப்­பா­ளர் இயக்­கு­நர் சக்­தி­வேல் தயா­ரிக்­கும் இரண்­டா­வது படம் இது.

“யாரும் எதிர்­பார்க்காத, யூகிக்க இய­லாத காட்­சி­க­ளோடு கதை நக­ரும். அத­னால் தொடக்­கம் முதல் இறு­தி­வரை உங்களை கதை உங்­கள் இருக்கை­யி­லேயே கட்­டிப்­போ­டும்,” என உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார் இயக்­கு­நர் ஜெகன் நாரா­ய­ணன்.

இவர் இயக்­கு­நர் சக்­தி­வே­லி­டம் பணி­யாற்­றி­ய­வர். அந்த அனு­ப­வத்­து­டன் கள­மி­றங்கி உள்­ளார்.

தேன் நிலவை காட்­டுப் பகு­தி­யில் கொண்­டாட முடி­வெ­டுக்­கிறது ஒரு காதல் ஜோடி. திரு­ம­ணத்­துக்­குப் பின் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தும்போது காட்­டுக்­குள் சில தீய சக்­தி­க­ளி­டம் சிக்­கு­கின்­ற­னர்.

அவர்­க­ளி­டம் இருந்து இரு­வ­ரும் தப்­பித்­த­னரா? என்­ப­து­தான் கதை. முழுப் படத்­தை­யும் அடர்ந்த காடு­க­ளி­லேயே பட­மாக்கி உள்­ள­னர்.

‘பர­தேசி’, ‘நான் சிவ­னா­கி­றேன்’ படங்­களில் நடித்த கார்த்­திக் அசோ­கன் நாய­க­னா­க­வும் மும்பை மாடல் அழகி பாயல் நாய­கி­யா­க­வும் நடித்­துள்­ள­னர். இரு­வ­ரும் சிறப்­பாக நடித்­தி­ருப்­ப­தா­கப் பாராட்­டு­கி­றார் இயக்­கு­நர். படம் மிக விரை­வில் திரை­காண உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon