சுடச் சுடச் செய்திகள்

சகோதரிகளாக நடிக்கும் நாயகிகள்

முன்பு போல் தென்­னிந்­திய நடி­கை­கள் மத்­தி­யில் போட்டி மனப்­பான்மை இல்லை என்­பது உண்­மை­தான் போலி­ருக்­கிறது. நடி­கை­கள் சமந்­தா­வும் ராஷ்­மிகா மந்­த­னா­வும் ஒரே படத்­தில் ஒப்­பந்­த­மாகி இருப்­பது இப்­ப­டிச் சொல்ல வைக்­கிறது.

இரு­வ­ரும் பிர­பல இயக்­கு­ந­ரின் படத்­தில் அக்கா, தங்­கை­யாக நடிக்க உள்­ள­ன­ராம். கதைப்­படி அக்கா சமந்­தா­வுக்கு தங்கை ராஷ்­மிகா மீது கொள்­ளைப் பிரி­ய­மாம்.

இவர்­க­ளின் பாசப் பிணைப்­பால் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­களை அல­சு­வ­து­தான் கதை என்று கூறப்­ப­டு­கிறது. கதை­யைக் கேட்­ட­துமே இரு முன்­னணி நடி­கை­களும் எந்­த­வித தயக்­க­மும் இன்றி கால்­ஷீட் கொடுத்­து­விட்­ட­தா­கத் தக­வல்.

கர்­நா­ட­கா­வைச் சேர்ந்த ராஷ்மிகா­வுக்கு தெலுங்­கில் நல்ல வர­வேற்பு உள்­ளது.

அறி­மு­க­மான வேகத்­தில் விஜய் தேவ­ர­கொண்டா, அல்லு அர்­ஜுன் போன்ற முன்­னணி நாய­கர்­க­ளு­டன் இணைந்து நடித்­துள்­ளார். தற்­போது தமி­ழி­லும் ஒரு படத்­தில் நடித்து வரு­கி­றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon