உங்­க­ளின் நேரத்­தை­யும் சக்­தி­யை­யும் பய­னுள்ள செயல்­க­ளுக்கு செல­வி­டுங்­கள்

நடி­கர் சூர்யா குறித்து நிறைய புதுத்­த­க­வல்­கள் தொடர்ந்து வெளி­யாகி வரு­கின்­றன.

ஹரி இயக்­கத்­தில் சூர்யா நடிப்­ப­தாக அறி­விக்­கப்­பட்ட ‘அருவா’ கைவி­டப்­பட்­ட­தாக அண்­மை­யில் ஒரு தக­வல் வெளி­யா­னது. சூர்யா தரப்­பில் இருந்து இதற்கு மறுப்பு தெரி­வித்து எந்த விளக்­க­மும் வெளி­யா­க­வில்லை.

இத­னால், ‘நல்ல தலைப்பு கைந­ழு­விப் போகி­றதே’ என்று அவ­ரது ரசி­கர்­கள் சமூக வலைத் தளங்­களில் புலம்­பத் துவங்­கி­னர்.

போதாத குறைக்கு இயக்­கு­நர் ஹரி அடுத்து தனது மைத்­து­ன­ரான அருண் விஜய்யை வைத்து படம் இயக்­கப்போவ­தா­க­வும் தக­வல் வெளி­யா­னது.

இரு­வ­ரும் இணை­வது இதுவே முதன்­முறை என்­ப­தா­ல், அருண் விஜய்க்கு ஏற்ப அதி­ரடி கதையை ஹரி உரு­வாக்கி இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. எனவே ஹரிக்கு பதி­லாக ‘அருவா’ படத்தை பாண்­டி­ராஜ் இயக்­கப்போவ­தாக மற்­றொரு தக­வல் உலா வந்­தது.

இத­னால் ரசி­கர்­கள் பெரும் குழப்­பத்­துக்கு ஆளான நிலை­யில், ‘அருவா’ கைந­ழு­விப்­போ­க­வில்லை என்று தெரி­ய­வந்­துள்­ளது. கொரோனா ஊர­டங்கு முடி­வ­டைந்த பிறகு இப்­ப­டத்­தின் பணி­கள் மீண்­டும் துவங்­கும் என அதன் தயா­ரிப்­புத் தரப்பு தெரி­வித்­துள்­ளது.

முன்பே அறி­வித்த தேதி­க­ளி­லும் இடங்­க­ளி­லும் படப்­பி­டிப்பை நடத்த திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­வும் மேலும் பல தக­வல்­கள் விரை­வில் அறி­விக்­கப்­படும் என­வும் தயா­ரிப்­புத் தரப்பு கூறி­யுள்­ளது.

‘அருவா’ படத்­தில் அண்­ணன், தம்பி என சூர்யா இரட்டை வேடங்­களில் நடிக்க, ராஷி கண்ணா நாய­கி­யாக ஒப்­பந்­த­மாகி உள்­ளார். இன்­னொரு நாய­கி­யும் உள்­ளா­ராம்.

“ஹரி இயக்­கும் படத்­தில் கண்ணை மூடிக்­கொண்டு நடிக்­க­லாம். கார­ணம் கதைக்­கேற்ப கதா­நா­ய­கர்­களை தேர்வு செய்து வேலை வாங்கு­வார். அவர் மீதான நம்­பிக்­கை­யில்­தான் ஆறா­வது முறை­யாக அவ­ரு­டன் இணைந்து பணி­யாற்­று­கி­றேன்,” என்­கி­றார் சூர்யா.

சமூக வலைத்­த­ளங்­களில் தம்மை விமர்­சித்து கருத்து தெரி­விப்­ப­வர்­க­ளுக்கு ரசி­கர்­கள் பதி­ல­ளிக்க வேண்­டாம் என அவர் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

இதன் மூலம் நேரத்தை வீண­டிக்க வேண்­டாம் என்­றும் என்­றும் அவர் அறி­வு­றுத்தி உள்­ளார்.

‘பிக்­பாஸ்’ மீரா மிதுன் அண்­மைய சில வாரங்­க­ளாக தமிழ் திரை­யு­ல­கின் முன்­னணி நாய­கர்­கள், நாய­கி­கள் குறித்து கடு­மை­யாக விமர்­சித்து வரு­கி­றார். குறிப்­பாக விஜய், சூர்யா குறித்த அவ­ரது விமர்­ச­னங்­க­ளால் ரசி­கர்­கள் மத்­தி­யில் கொந்­த­ளிப்பு நில­வு­கிறது. அவர்­களும் மீராவை தாக்­கும் வகை­யில் கருத்து தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

இயக்­கு­நர் பார­தி­ரா­ஜா­வும் தன் பங்­குக்கு, சமூக வலைத்­த­ளங்­களில் அவ­தூறு பேச்­சு­கள் அதி­க­ரித்­துள்­ள­தாக கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார். இந்­நி­லை­யில் ரசி­கர்­களை ஆசு­வா­சப்­படுத்­தும் வித­மாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார் சூர்யா.

“எனது தம்பி தங்­கை­க­ளின் நேர­மும் சக்­தி­யும் ஆக்­க­பூர்­வ­மான செயல்­க­ளுக்­குப் பயன்­பட வேண்­டும் என்­பதே என் விருப்­பம். இயக்­கு­நர் பாரதி­ரா­ஜா­வுக்கு என் உளப்­பூர்­வ­மான நன்­றி­கள்,” என சூர்யா குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு தாம் பதி­விட்ட சில கருத்­து­களை நினை­வு­கூர்ந்­துள்­ளார்.

“தரம் தாழ்ந்த விமர்­ச­னங்­க­ளுக்கு எதிர்­வி­னை­யாற்றி நம் தரத்தை நாம் குறைத்­துக்­கொள்ள வேண்­டாம்.

“உங்­க­ளின் நேரத்­தை­யும் சக்­தி­யை­யும் பய­னுள்ள செயல்­க­ளுக்கு செல­வி­டுங்­கள். சமூ­கம் பயன் பெற,” என்று தாம் குறிப்­பிட்­டி­ருந்­ததை இப்­போது சுட்­டிக்­காட்டி மீரா மிது­னுக்கு பதி­லடி கொடுத்­துள்­ளார் சூர்யா.

இதற்­கி­டையே ‘சூர­ரைப் போற்று’ படம் நேர­டி­யாக இணை­ய­த்த­ளத்­தில் வெளி­யா­கும் என்று உல­வும் தக­வல் வெறும் வதந்தி என்று படக்­கு­ழு­வி­னர் மீண்­டும் விளக்­கம் அளித்­துள்­ள­னர்.

சுதா கொங்­கரா இயக்­கத்­தில் சூர்யா நடிப்­பில் உரு­வா­கி­யுள்ள இந்­தப் படத்­தின் இந்தி மறு­ப­திப்பு உரி­மை­யைப் பெறு­வது தொடர்­பாக ‘பாலி­வுட்’டில் இப்­போதே கடும் போட்டி நில­வு­வ­தா­கத் தக­வல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!