சுடச் சுடச் செய்திகள்

நஷ்ட ஈடு கோருகிறார் வனிதா

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனிடம் 2.5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

தமது நற்பெயருக்கு லட்சுமி களங்கம் ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற வனிதாவின் திருமணம் குறித்து நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி ஆகிய மூவரும் விமர்சித்திருந்தனர்.

வனிதாவும் லட்சுமியும் நிகழ்ச்சி ஒன்றில் இணையம் வழி பங்கேற்றபோது ஒருவரை ஒருவர் ஒருமையில் காரசாரமாகத் திட்டிக்கொண்டனர்.

இதையடுத்து தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதற்காக 1.25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என கோரி வனிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் லட்சுமி.

இந்நிலையில் தமது சொந்த வாழ்க்கையில் தலையிட்டது மட்டுமின்றி நஷ்ட ஈடும் கேட்டு லட்சுமி தன்னை மிரட்டுவதாகக் கூறிவந்த வனிதா, தற்போது தன் பங்குக்கு நஷ்ட ஈடு கோரியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon