‘சிங்கப்பெண்’ மனதை பாதித்த கதாபாத்திரம்

‘பிக்­பாஸ்’ நிகழ்ச்­சிக்­குப் பிறகு கவின் நாய­க­னாக நடிக்­கும் படம் ‘லிஃப்ட்’. இதில் இரண்டு நாய­கி­களில் ஒரு­வ­ராக நடித்­துள்­ளார் காயத்ரி ரெட்டி.

அருகே உள்ள அவ­ரது புகைப்­படத்­தைப் பார்த்த அடுத்த கணமே ‘அட... நம்ம சிங்­கப்­பெண்...’ என்று உங்­களில் பலர் நினைத்­தி­ருப்­பீர்­கள்.

‘பிகில்’ படத்­தை­ய­டுத்து காயத்ரி நடிக்­கும் படம் இது. வினித் வர­பி­ர­சாத் இயக்­கு­கி­றார். விஜய்­யு­டன் நடித்­ததை நினைத்­துப் பார்த்­தால் கன­வு­போல் தோன்­று­கிறது என்று இன்­ன­மும்­கூட பிர­மிப்­பு­டன் பேசு­கிறார் காயத்ரி.

“என்­னைப் போன்ற அனைத்து இளம் நடி­கை­க­ளுக்­குமே விஜய் சாரு­டன் நடிக்கவேண்­டும் எனும் இலக்கு இருக்­கும். ஓரிரு காட்­சி­களில் அவ­ரு­டன் நடித்­தாலே போதும் என்று நினைப்­போம்.

“அவ­ரு­டன் தொடர்ந்து ஒரு மாதத்­துக்­கும் மேல் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­றது, அவ­ரது நடிப்பை அரு­கில் இருந்து பார்த்து ரசித்­தது எல்­லாம் மறக்க முடி­யாத அனு­ப­வங்­கள்,” என்­கி­றார் காயத்ரி.

‘லிஃப்ட்’ படத்­தில் தமக்கு வலு­வான கதா­பாத்­தி­ரம் அமைந்­தி­ருப்­பது மகிழ்ச்சி தரு­வ­தா­கக் குறிப்­பிடு­ப­வர், ‘பிகில்’ மூலம் தமிழ் ரசி­கர்­கள் மத்­தி­யில் கிடைத்­துள்ள அறி­மு­க­மும் அடை­யா­ள­மும் தனது திரைப் பய­ணத்­தில் வெகு­வா­கக் கைகொ­டுக்­கும் என்­கி­றார்.

“இயக்­கு­நர் வினித் வர­பி­ர­சாத் மிகத் திற­மை­யா­ன­வர். அவ­ரது திரைக்­கதை அமைப்பு பிர­மிக்க வைக்­கிறது. படம் பார்க்­கும்­போது திரை­யில் சில மாயா ஜாலங்­கள் நிக­ழும்­போது நான் சொல்­வது எந்­த­ளவு உண்மை என்­பது ரசி­கர்­க­ளுக்­கும் புரி­யும்,” என்று பாராட்­டும் காயத்ரி, தமக்­கான கதா­பாத்­தி­ரம் மிக அரு­மை­யாக அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் திருப்தி தெரி­விக்­கி­றார்.

படப்­பி­டிப்­பின் போது தாம் ஏற்றுக்­கொண்ட பாத்­தி­ர­மா­கவே மாறி­விட்­ட­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், சில காட்­சி­களில் நடித்­த­போது தம்­மை­யும் அறி­யா­மல் உணர்ச்­சி­வ­சப்பட்­டா­ராம்.

“பின்­ன­ணிக் குரல் கொடுத்­த­போ­தும் உணர்ச்­சி­ம­ய­மா­கப் பேசி­னேன். இந்­தக் கதா­பாத்­தி­ரம் என்னை மன­த­ள­வில் வெகு­வா­கப் பாதித்­துள்­ளது என்­பதை உணர முடிந்­தது.

“இந்­தப் படம் எனக்கு மட்­டு­மல்ல, ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வுக்­கும் கீழே இருந்து பலரை மேலே அழைத்­துச் செல்­லும் ‘லிஃப்ட்’ ஆக இருக்­கும்,” என்று நம்­பிக்­கை­யு­டன் பேசும் காயத்ரி, அண்­மை­யில் சமூக வலைத்­த­ளத்­தில் ரசி­கர்­க­ளு­டன் உரை­யா­டி­னார்.

அப்­போது பல்­வேறு கேள்­வி­களுக்கு சற்­றும் யோசிக்­கா­மல் பதி­ல­ளித்­த­வர், உரை­யா­டல் முடி­யும் வரை குறை­யாத உற்­சா­கத்­து­டன் பேசி­ய­தைப் பல­ரும் பாராட்­டி­னர்.

பட நாய­கன் கவின் குறித்து எழுப்­பப்­பட்ட கேள்­விக்­கும் வெளிப்­ படை­யா­கப் பதி­ல­ளித்­தார்.

“ஒரே வரி­யில் சொல்­வது என்­றால் அவர் மிக­வும் பெருந்­தன்­மை­யா­ன­வர், பெரிய மன­துக்­கா­ரர் என்­பேன். எப்­போ­துமே மிக­வும் இயல்­பா­க­வும் நட்­பா­க­வும் பேசிப் பழ­கு­வார்,” என்­றார் காயத்ரி.

‘பிகில்’ படத்­தில் நடித்த அம்­ரிதா ஐயர் இப்­ப­டத்­தில் நாய­கி­யாக நடிக்கி­றார். அவ­ரு­டன் மீண்டும் இணைந்து நடித்­தது இனிய அனு­ப­வம் என்­கி­றார் காயத்ரி.

நாய­கன் கவி­னும் அம்­ரி­தா­வும் ‘லிஃப்ட்’டில் சிக்கிக் கொள்­கி­றார்­கள். அதன் பிறகு நிக­ழும் சம்­ப­வங்­களும் எதிர்­பா­ராத திருப்­பங்­க­ளும்­தான் கதை­யாம்.

ஒவ்­வொரு காட்­சி­யும் விறு­வி­றுப்­பா­கவும் திகில் நிறைந்­த­தா­க­வும் இருக்கு­மாம். படம் வெளி­யா­ன­தும் தனக்கு மேலும் பல புதுப்­பட வாய்ப்பு­கள் தேடி­வ­ரும் என்­கி­றார் காயத்ரி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon