சுடச் சுடச் செய்திகள்

‘இது கௌரவ கொலைகளை அலசும் கதை’

‘சிலந்தி’, ‘ரண­தந்த்ரா’ (கன்­ன­டம்) படங்­களை இயக்­கிய ஆதி­ரா­ஜன் எழுதி இயக்கி இருக்­கும் படம் ‘அருவா சண்ட’.

இது கபடி மோத­லை­யும் காதல் சண்­டை­யை­யும் மைய­மாக வைத்து உரு­வா­கும் படைப்­பாம். அதி­லும் குறிப்­பாக கௌ­ர­வக் கொலை­யைப் பற்றி விரி­வாக அல­சும் கதை என்­கி­றார் இயக்­கு­நர் ஆதி­ரா­ஜன்.

உண்மை சம்­ப­வங்­க­ளின் அடிப்­ப­டை­யில் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கும் இந்த படத்­தில் ராஜா, மாள­விகா மேனன் இரு­வ­ரும் நாய­கன் நாய­கி­யாக நடிக்க, சரண்யா பொன்­வண்­ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்­சா­ க­ருப்பு, ‘காதல்’ சுகு­மார் உள்­ளிட்­டோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். சரண்யா பொன்­வண்­ணன் இது­வரை ஏற்­காத மாறு­பட்ட வேடத்­தில் மிரட்­டி­யி­ருக்­கி­றா­ராம்.

‘சிட்டு சிட்டு குருவி, வாலாட்­டுதே..’ என்ற பாடலை நடிகை ரம்யா நம்­பீ­சன் கொஞ்­சும் குர­லில் பாடி­யி­ருக்­கி­றார்.

“யூடி­யூப்­பில் வெளி­யி­டப்­பட்ட இந்­தப் பாட­லுக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. இளை­யர்­க­ளைக் கவ­ரும் வகை­யில் அரு­மை­யாக இசை­ய­மைத்­துள்­ளார் ­த­ரண்,” என்று பாராட்­டு­கி­றார் இயக்­கு­நர் ஆதி­ரா­ஜன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon