யோகிபாபு: தெளலத் படத்தில் நான் நடிக்கவில்லை

யோகிபாபு: தெளலத் படத்தில் நான் நடிக்கவில்லை

1 mins read
4e16d7b2-fa16-433f-828c-be61559016d4
விஜய்சேதுபதியுடன் யோகிபாபு. படம்: ஊடகம் -

தாம் ஒப்புக்கொள்ளாத போதிலும், சில படங்களுக்கு தன் பெயருடன் விளம்­ப­ரங்­கள் செய்­யப்­ப­டு­வ­தாக யோகி­பாபு தெரி­வித்­துள்­ளார்.

அண்­மை­யில் 'தெள­லத்' என்ற படத்­தில் இவர் நடிப்­ப­தாக விளம்­பரம் வெளியானது. ஆனால் ­யோகி தரப்பு இதை மறுத்துள்ளது.

"இன்­று­தான் 'தெள­லத்' படத்­தின் விளம்­ப­ரத்­தைப் பார்த்­தேன். எனக்­கும் அப்­ப­டத்­துக்­கும் எந்­த­வித சம்­பந்­த­மும் இல்லை," என யோகி­பாபு கூறியுள்ளார்.

"விஜய் சேது­பதி, சிவ­கார்த்தி­கே­யன் உள்­ளிட்ட நடி­கர்­க­ளின் படங்­க­ளுக்கே கால்­ஷீட் ஒதுக்க முடி­யாத நிலை­யில், சிறு படங்­களில் யோகியால் நடிக்க இயலாது," என்கிறார்கள் நெருக்­க­மா­ன­வர்­கள்.