புற்றுநோய்: திரை உலகத்தினர் அதிர்ச்சி

பிர­பல இந்தி நடி­கர் சஞ்­சய் தத் நுரை­யீ­ரல் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளதை அடுத்து சிகிச்­சைக்­காக அமெ­ரிக்கா செல்­கி­றார்.

இதை­ய­டுத்து தமது கண­வ­ரது உடல்­நிலை குறித்து பர­வும் வதந்­தி­களை ரசி­கர்­கள் நம்­ப­வேண்­டாம் என சஞ்­சய் தத்­தின் மனைவி மான்­யதா கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

“சஞ்­சய் எப்­போ­தும் ஒரு போராளி­யா­கவே இருந்து வந்­துள்­ளார். எங்­கள் குடும்­ப­மும் அப்­ப­டிப்­பட்­ட­து­தான். எதிர்­வர இருக்­கும் சவால்­க­ளைக் கடக்க கட­வுள் எங்­களை மீண்­டும் சோதிப்­ப­தற்­கா­கத் தேர்ந்­தெ­டுத்­துள்­ளார்,” என்று மான்யதா கூறி­யுள்­ளார்.

கிரிக்­கெட் வீரர் யுவ­ராஜ் சிங் தமது டுவிட்­டர் பதி­வில், “இது வலி மிகுந்த அனு­ப­வம்­தான். எனி­னும் அதை தாங்­கும் சக்தி உங்­க­ளுக்கு உண்டு,” எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் யுவ­ராஜ் சிங்­கும் தொண்­டை­யில் உள்ள கட்­டியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்­கொண்­டார். கடந்த 1993ஆம் ஆண்­டில் நடந்த மும்பை குண்டு வெடிப்பு வழக்­கில் சஞ்­சய் தத்­தும் சிறை­வா­சம் அனு­ப­வித்­தார். விடு­த­லை­யான பிற­கும் படங்­களில் நடித்து வந்த ­நி­லை­யில் அவ­ரைப் புற்­று­நோய் தாக்­கி­யுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon