'மனம் சொல்வதைச் செய்வோம்'

'மனம் சொல்வதைச் செய்வோம்'

1 mins read
996de0b4-e501-4b8f-9e1a-154f56bd4fc9
எனக்குப் பிடித்ததைச் செய்தேன், அவ்வளவுதான். ஆனால் என்னை புரட்சி செய்பவளாகக் குறிப்பிடுவார்கள் என்பது நன்றாகத் தெரியும் என்கிறார் வித்யா பாலன். -

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மனம் சொல்வதைக் கேட்டுச் செயல்படுவதுதான் நல்லது என முடிவெடுத்தாராம் வித்யா பாலன்.

அது மிக எளிதாக இருந்தது என்றும் இயற்கையாக வராத ஒன்றை செய்யும்போது அது நமக்கு மிகக் கடினமாக இருக்கும் என்பதை அப்போது உணர்ந்ததாகவும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

"நான் என்னை எந்தவிதத்திலும் புரட்சி முடிவு எடுப்பவளாகப் பார்க்க வில்லை. எனக்குப் பிடித்ததைச் செய்தேன், அவ்வளவுதான். ஆனால் என்னை புரட்சி செய்பவளாகக் குறிப்பிடுவார்கள் என்பது நன்றாகத் தெரியும்," என்கிறார் வித்யா பாலன்.