அன்பை பரப்புங்கள்: ஆதி வேண்டுகோள்

அன்பை பரப்புங்கள்: ஆதி வேண்டுகோள்

1 mins read
2da7342f-b45c-452f-8ea6-b005823b5140
மற்றவரைப் பற்றி கிண்டல் செய்யும் வகையில் விமர்சனம் செய்வதற்குப் பதில் கொஞ்சம் அன்பைப் பரப்ப முயற்சிசெய்யுங்கள். ஒரு அழகான வட்டத்தில் அது மீண்டும் உங்களுக்கே திரும்பக் கிடைக்கும் என்று டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ஹிப்ஹாப் ஆதி. படம்: ஊடகம் -

தன்னைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு அண்மையில் வெளியான தமது பாடல்களே பதில் என்கிறார் ஹிப்ஹாப் ஆதி.

அண்மையில் இவரைப் பற்றி சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்திருந்தனர். இதற்கு பேட்டி ஒன்றில் பதில் கொடுத்துள்ளார் ஆதி.

"என் சமீபத்திய பாடல்களே விமர்சகர்களுக்கான எனது பதில். மெய் நிகர் உலகில் தங்களுக்கு தாங்களே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சிலர் கவனம் இழக்கின்றனர் என்று நினைக்கிறேன்.

"நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை பற்றி வருத்தமாகப் பதிவிட்டு, அடுத்த நிமிடம் ஒருவரைக் கிண்டல் செய்யும் மக்கள் நம்மிடையே இருக்கின்றனர்.

"எனவே கொஞ்சம் அன்பைப் பரப்புங்கள். ஒரு அழகான வட்டத்தில் அது மீண்டும் உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்," என்று டுவிட்டர் பதிவு ஒன்றில் ஆதி குறிப்பிட்டுள்ளார்.