இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கதை எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் 'ஓ அந்த நாட்கள்'.
காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் அளித்து உருவாகி உள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
1980களின் நட்சத்திர நாயகிகளான ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் இதில் நெருங்கிய தோழிகளாக நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஜித்தின் ராஜ், லதா ஹெக்டே, ஒய் ஜி மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குநர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் வந்து மெருகேற்றுகிறார்.
"முக்கியமான காட்சிகளை ஆஸ்திரேலியாவில் படமாக்கி உள்ளோம். கடந்த மே மாதம் படத்தில் இடம்பெறும் 'மெட்ராஸ் என்ன.. மெல்போர்ன் என்ன...' என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு உற்சாகம் அளிக்கிறது," என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
இதையடுத்து 'இனியொரு தொல்லையும் இல்லை..' என்ற பாடலையும் வெளியிட்டுள்ளனர். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

