இனிமேல் கண்ணியமான கதாபாத்திரம்தான்

இனிமேல் கண்ணியமான கதாபாத்திரம்தான்

3 mins read
0605e636-aa7e-49b9-8da9-702e9b9aa493
யாஷிகா ஆனந்த். படம்: ஊடகம் -

'பிக்­பாஸ்' நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­போது தமக்கு எந்­த­வித எதிர்­பார்ப்­பு­களும் இல்லை என்­கி­றார் யாஷிகா ஆனந்த்.

'ஜாம்பி', 'இவன்­தான் உத்­த­மன்', 'ராஜ­பீமா', 'சிறுத்தை சிவா' என அடுத்­த­டுத்து பல படங்­களில் நடித்து முடித்­தி­ருந்­தா­லும் இன்­னும் பெரிய வெற்­றியை இவர் பெற­வில்லை.

இந்­நி­லை­யில் ஊர­டங்­கைப் பயன்­ப­டுத்தி திடீ­ரென நன்­றாக உடல் இளைத்­துள்­ளார் யாஷிகா. மேலும், தொலைக்­காட்­சித் தொடர்­க­ளி­லும் தலை­காட்­டத் துவங்கி உள்­ளார்.

"ஏன் தொடர்­களில் நடிக்­கி­றீர்­கள் என்று கேட்­காத ரசி­கர்­களே இல்லை. நான் தற்­போது நடிக்­கும் தொட­ரின் இயக்­கு­நர் எனக்கு நல்ல நண்­பர். அவர் கேட்­டுக் கொண்­ட­தால்­தான் அதில் நடித்­தேன்.

"நான் ஏற்­றி­ருப்­பது கௌரவ கதா­பாத்­தி­ரம்­தான். இதன் பிறகு வேறு எந்­தத் தொட­ரி­லும் என்­னைப் பார்க்க இய­லாது," என்று திட்­ட­வட்­ட­மா­கச் சொல்­லும் யாஷி­கா­வின் நடிப்­பில் அடுத்­த­டுத்து ஐந்து படங்­கள் வெளி­யாக தயா­ராக உள்­ள­ன­வாம்.

"அவற்­றுள் எந்­தப் படம் திரை­ய­ரங்­கில் வெளி­யீடு காணும், எவை எல்­லாம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­கும் என்­பது எனக்­குத் தெரி­யாது. ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­படும் முன்பே இந்­தப் படங்­க­ளுக்­கான அனைத்­துப் பணி­களும் முடிந்­து­விட்­டன. இருப்­பி­னும் சில கார­ணங்­க­ளால் வெளி­யீடு காண­வில்லை.

"அத­னால் மிக­வும் விரக்­தி­யாக இருந்­தது. பிறகு மற்ற விஷ­யங்­களில் கவ­னம் செலுத்­தி­ய­தால் பழைய உற்­சா­கத்­துக்கு திரும்­பி­யுள்­ளேன்," என்­கி­றார் யாஷிகா.

உடல் எடை­யைக் குறைக்க கார­ணம்?

"புதுப் படத்­துக்­கா­கவோ, நான் ஏற்­கும் கதா­பாத்­தி­ரத்­துக்­கா­கவோ இப்­படி இளைக்­க­வில்லை. நீண்ட நாட்­க­ளாக எனக்கு இப்­ப­டி­யோர் எண்­ணம் இருந்­தது. ஊர­டங்கு வச­தி­யாக அமைந்­த­தால் இளைத்­து­விட்­டேன்," என்று சொல்­ப­வர், 'பிக்­பாஸ்' நிகழ்ச்­சிக்கு தடை­வி­திக்க வேண்­டும் என்­பதை தம்­மால் ஏற்க முடி­யாது என்­கி­றார்.

மேலும், விளம்­ப­ரத்­துக்­காக அந்த நிகழ்ச்­சி­யில் சில விஷ­யங்­கள் திட்­ட­மிட்டு அரங்­கேற்­றப்­ப­டு­வ­தாக தாம் கரு­த­வில்லை என்­றும் கூறு­கி­றார்.

"ஒரு நிகழ்ச்­சி­யின் வெற்றி, தோல்­வியை வேண்­டு­மா­னால் தரக்­கு­றி­யீடு மற்­றும் விளம்­ப­ரங்­கள் தீர்­மா­னிக்­க­லாம். மனி­தர்­க­ளின் குணா­தி­ச­யங்­களை முடிவு செய்ய முடி­யாது.

"'பிக்­பாஸ்' பங்­கேற்­பா­ளர்­கள் அந்த வீட்­டில் நில­வும் சூழ்­நி­லைக்­கேற்ப எதிர்­வி­னை­யாற்­று­கி­றார்­கள். அந்த நிகழ்ச்­சி­யால் ஏற்­படும் மன அழுத்­தம் கார­ண­மா­கவே இவ்­வாறு நிகழ்­கிறது.

"எனவே பங்­கேற்­பா­ளர்­கள் சித்­ர­வதை செய்­யப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­வதை எல்­லாம் ஏற்க முடி­யாது. அப்­ப­டிப் பார்த்­தால் சண்டை போட்­டுக் கொண்­டா­லும் பங்­கேற்­பா­ளர்­க­ளுக்­குள் மீண்­டும் சமா­தா­ன­மும் ஏற்­ப­டு­கிறது என்­ப­தைக் கவ­னிக்க வேண்­டும்," என்­கி­றார் யாஷிகா.

தொடர்ந்து கவர்ச்­சிக் கதா­பாத்­தி­ரங்­களில் மட்­டுமே நடிப்­ப­தில் இவ­ருக்கு விருப்­பம் இல்­லை­யாம். குணச்­சித்­திர பாத்­தி­ரங்­க­ளி­லும் கவ­னம் செலுத்த விரும்­பு­கி­றா­ராம்.

'பிக்­பாஸ்' நிகழ்ச்­சிக்­குப் பிறகு தமக்­குப் பெண் ரசி­கை­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அவர்­க­ளைத் தக்க வைத்­துக் கொள்­வ­தில் முனைப்­பாக இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"இனி­மேல் நான் நடிக்­கும் கதா­பாத்­தி­ரங்­களில் அதிக கவர்ச்சி இருக்­காது.

"உண்­மை­யில் இப்­போது நிறைய கண்­ணி­ய­மான கதா­பாத்­தி­ரங்­கள்­தான் தேடி வரு­கின்­றன.

"இந்த மாற்­றத்­துக்கு 'பிக்­பாஸ்' நிகழ்ச்­சி­யும் ஒரு கார­ணம் என்­பேன்.

"இது நான் எதிர்­பா­ராத ஒரு விஷ­யம். ஆனால் பெரும் மகிழ்ச்­சியை தந்­துள்­ளது," என்று சொல்­லும் யாஷிகா ஊர­டங்­கின்­போது தம்­மால் இயன்ற சில உத­வி­களை ஆத­ர­வற்ற மக்­க­ளுக்­குச் செய்­துள்­ளார்.

இது­கு­றித்து விளம்­ப­ரப்­ப­டுத்­திக் கொள்ள யாஷிகா விரும்­ப­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

இவர் நடிக்க ஒப்­புக் கொண்­டுள்ள புதுப் படங்­கள் குறித்து விரை­வில் அதி­கா­ர­பூர்வ அறி­விப்­பு­கள் வெளி­யா­கு­மாம்.

சினிமா ரசி­கர்­களை மகிழ்­வப்­பதே தமது முக்­கி­ய­மான பணி என்று அக்­க­றை­யு­டன் பேசு­கி­றார் யாஷிகா ஆனந்த்.

நடப்பு ஊர­டங்கு முடி­வுக்கு வந்த பின் மேலும் சில சுவா­ர­சி­ய­மான, முக்­கி­ய­மான தக­வல்­களை வெளி­யி­டப் போவ­தா­க­வும் சொல்­கி­றார்.